...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 10, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                    திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற மகளிர் தினவிழா -
                             சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் பெண் ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து தங்களது உற்சாகத்தையும் உபசரிப்புகளையும் வெளிக்காட்டியதை நாம் புகைப்படங்கள் வாயிலாக பார்த்திருந்தோம் .ஆனால் வழக்கம்போல் புகைப்படத்திற்க்காக மட்டுமல்ல பல புதுமைகளை படைக்கவும் முடியும் என திருநெல்வேலி தலைமை அஞ்சலக தோழியர்கள் நேற்று (09.03.2020)நடைபெற்ற நிகழ்வின் மூலம் நிரூபித்துள்ளனர் .
குறிப்பாக எந்த தோழியரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஏதாவது ஒரு பங்களிப்பை தர வைத்தது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தோழியர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்க முடிந்தது .
நமது மூத்த தோழியர் 1992 தலமட்ட போராட்டத்தில் நமது தலைவர்களோடு சேர்ந்து பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட P.குமாரி DY போஸ்ட்மாஸ்டர் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தான் பணிபுரியும் அலுவலகத்தில் எல்லாம் தோழியர்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் வல்லமை படைத்த தோழியர் முத்துபேச்சியம்மாள் அவர்கள் நிழச்சிகளை வழக்கம்போல் அவரது பாணியிலே சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள் .தோழியர் தனுஜா அவர்கள் வரவேற்புரை பகிர்ந்தார்கள்  
முதல்நிகழ்ச்சியாக இறைவணக்கம் தோழியர்கள் முப்பிடாதி மற்றும் முத்துலட்சுமி அவர்களால் பாடப்பட்டது .அதனை தொடர்ந்து தோழியர் டாக்டர் .PN .ஜெயலட்சுமி அவர்கள் மகளிர் தின வரலாறு ஒரு போராட்ட பின்னணியில் அமைந்ததை சொல்லித்தந்தார்கள் ..பார்வையாளர்களின் புருவ நெற்றியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் தனது தனி நடிப்பு  மூலம்  மனதுக்கு மருந்து காலம் என்கின்ற தலைப்பில்  கல்லூரி நாட்கள் தொடங்கி இன்றைய அலுவலக நடப்புகளை மிக இயல்பாகவும்  இனிமையாகவும் கருத்துக்களை அள்ளித்தெளித்த தோழியர் பூர்ணகலாஅதனை தொடர்ந்து இன்பத்தமிழில் இனியக்கவிதையை வழங்கிய நமது கவிஞர் முத்துலட்சமி என நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் தொடர்ந்தது .அதனை தொடர்ந்து நடந்த  குறுநாடகம்  நவீன கண்ணகி நாடகத்தில் கண்ணகியாக தோழியர் சந்தான லட்சமி அவர்களும் கோவலனாக தோழியர் முத்துலட்சுமி அவர்களும்  அவர்களோடு இனைந்து பன்முக பங்காற்றிய தோழியர் பூர்ணகலா அவர்களின் நடிப்பும்  பிரமிக்க வைத்தது .இதற்கிடையில் தோழியர் ராஜேஸ்வரி அவர்க்ளின் கவிதையும் அரங்கேறியது இறுதியாக பெண்கள் வேலைக்கு செல்வது சுகமா ?சுமையா ? என்கின்ற தலைப்பில்   பட்டிமன்றம் நடைபெற்றது .நமது மூத்த தோழியர் பசுமதி நடுவராகவும் சுகமே என்கின்ற தலைப்பில் தோழியர்கள் அருணாரணி ஞான சுந்தரி கலா அவர்களும் சுமையே என்கின்ற தலைப்பில் தோழியர்கள் பூர்ணகலா ,முத்துபேச்சியம்மாள் ஆகியோர்களும் தரமான கருத்துக்களை பகிர்ந்தார்கள் .இன்றைய நாட்டு  நடப்புகளை மிக கட்சிதமாக நிரூபிக்கும் வகையில் தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக வழங்கவேண்டும் என  நடுவர் நிர்பந்திக்கப்பட்டவிதமும் அருமையாக இருந்தது .இறுதியாக பெண்கள் வேலைக்கு செல்வது ஒரு சுகமான சுமையே என தீர்ப்பினை வழங்கி நடுவர் அவர்களும் நழுவிக்கொண்டார்கள் ..இறுதியாக தோழியர் சுப்புலட்சுமி அவர்களும் தனது கருத்துக்களை பகிர்துகொண்டார்கள் .
                    மொத்தத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற மகளிர் தினவிழா ஒருசடங்காக இல்லாமல் நாளைய நம் சந்ததிகளுக்கு இந்த ஒற்றுமையை முன்னெடுத்துச்செல்லும் நல்ல தொடக்கமாகவே அமைந்தது . மேடை ஏற ஒருவரால் தான் முடியும் பேசுவதற்கு சிலருக்கு தான் தெரியும் என்றில்லாமல் அனைவரையும் பங்கேற்கவைத்ததே இந்த நிகழ்வின் மாபெரும் வெற்றி .தோழியர்களின் முயற்சிகள் தொடர வாழ்த்திமகிழ்கிறோம் .நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 














0 comments:

Post a Comment