அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவிற்க்கான அறிவிப்புகள் நேற்று(18.03.2020) கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .எழுத்தர்களில் 50 ஊழியர்கள் TENURE முடிக்கிறார்கள் .அவர்களுக்கு 51 இடங்கள் காட்டப்பட்டுள்ளன .LSG ஊழியர்களில் பணிஒய்வு நீங்கலாக 29 ஊழியர்களுக்கு 66 இடங்கள் காட்டப்பட்டுள்ளன .ஆகவே Timescale எழுத்தர்களை பொறுத்தவரை
மிக கவனமாக விருப்ப இடங்களை தெரிவு செய்யவேண்டிய அவசியம் உள்ளது .கோட்ட மட்டத்தில் உள்ள சீனியாரிட்டி பட்டியல் 01.07.2018 இன் படி DGL எழுத்தர்களுக்கும் LSG ஊழியர்களுக்கு 10.07.2019 அன்று CPMG அலுவலகம் வெளியிட்ட CGL படி சீனியாரிட்டி குறிக்கப்பட்டு உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம் .(இரண்டு LSG ஊழியர்களுக்கான சீனியாரிட்டி மட்டும் விடுபட்டுள்ளது பொறுத்தருள்க ) உங்களுக்கு நன்றாக தெரியும் .இடமாறுதல்களை பொறுத்தவரை சீனியாரிட்டி மிக சரியாக கடைபிடிக்கப்படும் என்றும் அதில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் அப்படிப்பட்ட இடமாறுதல்கள் குறித்து மண்டல அலுவலகத்திற்கு மேல்முறையீடு செய்யவும் நமக்கு வசதிகள் உள்ளது .
இந்த அறிவிப்பில் ஏதேனும் விடுதல் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .நேற்றே சில தோழர்கள் தெரிவித்தபடி தலைமை அஞ்சலகத்தில் உள்ள LSG PA பதவிகள் குறித்து தனித்தனியாக தெரிவிக்கவேண்டும் என்றுகூறினார்கள் (.உதா) .CPC PA BPC PA என தனியாக அடையாளம் காட்டப்படவேண்டும் என்றார்கள் .காரணம் BPC LSG PA பாளையங்கோட்டையில் வேலைநேரம் இரவு 8 மணி வரை இருக்கும் . .அதற்காக நமது கோட்ட சங்கம் தனியாக கடிதம் எழுதவுள்ளது .மேலும் TENURE முடிக்காத ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் அதில் ஏதும் தடையில்லை .நான் ஏற்கனவே விண்ணப்பித்திருக்கிறேன் என்பது கிடையாது
EXTENSION கேட்டு விண்ணப்பிக்க கடைசிதேதி 24.03.2020
விருப்ப விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்தில் சேரவேண்டிய கடைசிநாள் 31.03.2020
அறிவிப்பில் குறைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டிய கடைசிநாள் 24.03.2020
குறிப்பு -கண்டிப்பாக மூன்று விருப்ப இடங்களை ORDER OF PREFERENCE அடிப்படையில் அனுப்பவும் .
மேலும் விவரங்களுக்கு கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment