...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 17, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                       மீண்டும் NELLAI NFPE 100/100 
புதியதாக தபால்காரராக பதவிஉயர்வு பெற்றுள்ள 29 தோழர்களில் 5 தோழர்கள் SORTING ASSISTANT ஆக சென்றது  3 MTS நமது உறுப்பினர்கள் போக மீதமுள்ள 21 ஊழியர்களும் நேற்றே  நமது பேரியக்கமான NFPE யில் தங்களை இனைத்து கொண்டனர் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .ஏற்கனவே இந்தமாதம் புதிதாக MTS ஆக பதவியேற்ற மூன்று தோழர்களும் நம்மிடம் உறுப்பினர்கள் ஆனார்கள் .இந்த இமாலய வெற்றியை பெற்றுத்தர ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
  நமது கோட்டத்தில் தபால்காரர் பதவிகள் காலியாகவுள்ள இடங்கள் கீழே (உத்தேசமாக ) கொடுக்கப்பட்டுள்ளது .புதிய தோழர்கள் தங்களுக்கு எந்த அலுவலகம் வேண்டும் என்பதனை இன்று எழுத்துபூர்வமாக கொடுக்க வசதியாக இதை பயன்படுத்திக்கொள்ளலாம் .மூன்று இடங்கள் கேட்டாலும் தங்களுக்கு தேவையான இடத்தை முதலாம் விருப்பமாக கொடுக்க கேட்டுக்கொள்கிறோம் .
                                      நெல்லை மாநகர் பகுதி 
பாளையம்கோட்டை HO--7 திருநெல்வேலி HO-7  பெருமாள்புரம் -7 
மகா ராஜநகர் -5 மேலப்பாளையம் -3 டவுண் -6 பேட்டை -2  வண்ணார்பேட்டை -1
                                        புறநகர் பகுதி 
திசையன்விளை --1 நான்குனேரி -1 வள்ளியூர் -1 களக்காடு -1 ராதாபுரம் -1  ஏர்வாடி -1
                                           அம்பாசமுத்திரம் பகுதி 
அம்பாசமுத்திரம் HO-4  வீ.கே .புரம் --2  கல்லிடைக்குறிச்சி -2 வீரவநல்லூர் -1 கடையம் -1 முக்கூடல் -1 சேரன்மகாதேவி -1 பத்தமடை -1 பாபநாசம் மில்ஸ் -1
    பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு தங்கள் சொந்த ஊருக்கு/வசிக்கும் பகுதியின்  அருகில் பணிசெய்திட  வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழு ஈடுபாட்டோடும் அர்பணிப்போடும் இலாகா பணியை செய்திடுவார்கள் என்பது உறுதி .அந்த வகையில் செயல்படும் நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..
நேற்றைய உறுப்பினர்கள் சேர்ப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பாக புதியதோழர்களை ஒருங்கிணைத்த  அருமை தம்பிகள் செல்வரத்தினம்  அருண்குமார் மகேஷ் அருணாச்சலம் மருது உள்ளிட்ட இளைய தளபதிகளுக்கு நன்றி !நன்றி !இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment