...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 31, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                         அஞ்சல் துறை இன்று சேவை துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதுவரை லாபநட்ட கணக்குகளை காட்டி  GDS ஊழியர்களின் ஊதியக்குறைப்பை அரங்கேற்றிய நிர்வாகம் ,.NET கணக்குகளின் விகிதம் காட்டி அதிகமான கணக்குகளை தொடங்காவிட்டால் உங்கள் அலுவலகம இடம்பெயரும் என எச்சரித்த நிர்வாகம் இரவுபகலாக ஊழியர்களை டார்கெட் நிர்ணயம் செய்து விரட்டி விரட்டி வேலை வாங்கிய நிர்வாகம் இன்று சொல்லுகிறது அஞ்சல் துறை சேவை துறைதான் என்று ..நாம் ஏற்றுக்கொள்கிறோம் .இதுபோன்ற பேரிடர் காலங்களிலும் போர்மேகம் நமது நாட்டில் சூழ்ந்த பொழுதெல்லாம் அஞ்சல் ஊழியர்கள் தன்னார்வத்தோடு APS சேவையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது .இந்தியா -பாகிஸ்தான் யுத்தத்தின் போது நமது தலைவர்கள் 08.09.1965 யில் நமது துறை அன்றைய அமைச்சர் சத்ய நாராயண சின்காவை 08.09.1965 யில் சந்தித்து நமது அடையாள பங்களிப்பாக நன்கொடைகளை பிரித்து கொடுத்தார்கள் .கார்கில் போரின் போது அன்றைய வேலைநிறுத்த கோரிக்கைகளை அப்படியே  விட்டுவிட்டார்கள் ..
               ஆகவே அஞ்சல் ஊழியர்கள் யாரும் சேவையை மறந்து வீட்டில் இருக்கவில்லை .இந்த கொடியநோய் தாக்கத்தில் இருந்து நாட்டை காக்கவும் பிரதமந்திரி அவர்கள் கடைபிடிக்க சொல்லும் சமூக விலகலை கடைபிடிக்கவும் தான் தனித்திருக்கிறோம் .
            இப்பொழுதும் எங்கள் கோரிக்கை இந்த தொற்று பரவாமல் தடுக்க கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை எங்களுக்கு வழங்குங்கள் .
              மாவட்ட ஆட்சியர் கூட ரேஷன் கடை பணியாளர்களுக்கு  சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் .ஏன் நமது நிர்வாகமும் இங்குள்ள உபகோட்ட அதிகாரிகளை களத்தில் இறக்கிவிட்டு ஒவ்வொரு அலுவலகத்திலும் 1மீட்டர் இடைவெளியில் கவுண்டர் அமைக்கவும் ஊழியர்க்ளுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கையுறைகளை வாங்கித்தரவும்  உபகோட்ட அதிகாரிகளை அனுப்பினால் மிக சிறப்பாக அமையும் 
                உபகோட்ட அதிகாரிகள் எல்லா அலுவலகங்களிலும் நமது மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுளதா என ஆய்வு செய்தபின் அவர்கள் திருப்தி அடைந்தபின் அலுவலக பணிகளை செய்ய ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் ..
            

நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

2 comments: