...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 24, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
   மாநில சங்க அறிவிப்பின் படி  இந்த அறிவிப்பை கோட்ட சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது .
 அஞ்சல் துறை குறித்து அச்சப்படவேண்டாம் -நம்மை நாம் பாதுகாத்து கொள்வோம் !
நம்மிடம் வாக்குறுதிகளை அளித்த படியே சிபிஎம்ஜி இன்று ஆணையிட்டதன் படி ஒவ்வொரு கோட்டத்திலும் முக்கியமான சில அலுவலகங்கள் மட்டும் திறந்து வைப்பது என்று முடிவை அறிவித்து இருக்கிறார்கள். முழுமையாக அஞ்சலகம் மூடப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையினை பொதுச்செயலர் இடம் மீண்டும் வற்புறுத்தி இருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் .
பணிக்கு வர முடியாதவர்கள் காரணம் சொல்லி மெயில் அனுப்பி வீட்டில் தங்கிடவும்.
மூன்று காரணங்களைச் சொல்லலாம் .
ஒன்று வயது ஐம்பது வயதுக்குமேல் ஆகிவிட்டது .
இரண்டு உடல் நலம் சரியில்லை பாதுகாப்பாக வெளியில் வரமுடியவில்லை. மூன்று போக்குவரத்து வசதிகள் இல்லை
 இவைகளைக் காட்டி உங்களுடைய விண்ணப்பத்தை அளித்திடவும்
நிலைமை சரியானதும் பேசி தீர்வு காண்போம்.
கவலையினை கைவிடுங்கள்.
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். கொரோனாவை முதலில் விரட்டியடிப்போம்.
நன்றி

A.வீரமணி
 மாநிலச் செயலர்.                   அஞ்சல் மூன்று
--------------------------------------------------------------------------------------------------------------------நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment