...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 30, 2020

                                           தோழமையை நேசிப்போம் 

அதிகாலை முதல் 
அந்தி சாயும் வரை 
உழைத்த சமூகம் 
உயர்த்தி முழங்கிய  கோசம் தான் 
எட்டுமணி நேர வேலை 

சிகாகோ வீதியெங்கும் -ரத்தம் 
சிந்த சிந்த தொழிலாளிகள் 
துப்பாக்கியும் _ தூக்கும் 
தலைவர்களை அலங்கரித்தன 

பணிக்கு வந்த  புதிதில் 
எங்கள்   நாட்கள் -இப்படித்தான் 
நட்போடு  நகர்ந்திருந்தன 
நட்புகள் மெல்ல மெல்ல  
தோழமைகளை  துளிர்த்திருந்தன 

தோழமைகள் ஒவொருநாளும் 
தேடலை தர தொடங்கிருந்தன 
தேடல்கள்  எங்கள் உள்ளங்களில் 
தெளிவை கான துடித்தன 

ஆம் நாங்கள் தோழர்களாகி விட்டோம்  
ஒருவரை ஒருவர் 
தோழர்களென்று விளிக்கவும் 
தொடங்கிவிட்டோம் 

தோழமை -இங்கு 
புதுப்புது உறவை கூட்டியிருக்கிறது 
 மதம் இனம் மொழி கடந்து 
வர்க்க உணர்வு அரும்பி கொண்டிருந்தது 

தோழமை மட்டும் தான் -உலகை 
உனக்கு காட்டும் 
மற்ற உறவுகள் எல்லாம் 
உன்னுள்ளே முடங்கும் என்ற 
உண்மையை காலம் எங்களுக்கு 
உணர்த்த தொடங்கியிருந்தது 

ஒற்றுமை என்பது  உலக 
அவசியமாகிவிட்டது 
உரிமை மட்டுமே தீர்வு என்று 
ஒலிக்கதொடங்கிவிட்டது 

அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கைகளை 
அலட்சியம் செய்யம் நேரம்  வந்துவிட்டது
நிர்வாகத்தில் நீயும்  பாதி எனும் 
நீதி பலிக்க தொடங்கிவிட்டது 

அடக்குமுறை அடிமை 
இவைகளெல்லம் அடுத்த 
கிரகம் எற தயாராகிவிட்டது 

அடுத்தவனுக்கு வந்தால்
 நமக்கென்ன என்ற நினைப்பு 
விலக  தொடங்கிவிட்டது 

இழப்பதற்கு ஒன்றும் இல்லை -என்ற 
உண்மை உணர்த்த தொடங்கிவிட்டது 
இன்னும் தயக்கமா ? என 
கேள்விகள் எங்கும் கேட்க தொடங்கிவிட்டது 

புதிய அத்தியாயம் படைக்க 
புது புயலாய் புறப்படுவோம் 
தோழமைக்காய் சுவாசிப்போம் 
தோழமையை நேசிப்போம் 
                                   மே தின வாழ்த்துக்களுடன் 
                                                          ----------   SK .ஜேக்கப் ராஜ்------------------



















அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      இன்று பணிஓய்வு பெறுகின்ற தோழர்களை வாழ்த்துகிறோம் =30.04.2020 
தோழர் SK .பாட்சா அஞ்சல்நான்கின் கோட்ட செயலராக 8 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி நமது கோட்டத்திற்கு மாநில அளவில் தனி அடையாளத்தை பெற்றுத்தந்தவர் .மிக சிறந்த பொதுநல சேவகர் .அஞ்சல் நான்கில் உறுப்பினர்களின் சேர்க்கையில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் .தோழர் பாட்சா அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம் 
தோழர் மாசனமுத்து தபால்காரர் நான்குனேரி -GDS ஆக தனது பணியினை தொடங்கி தனது பணியினை மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடத்தி காட்டியவர் .NFPE இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் .பாலைவன சோலை போல இக்கட்டான நேரத்தில் நான்குனேரியில் நமது இயக்க பணிகளை ஆற்றியவர் .அண்ணன் அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாக ரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, April 29, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                 இந்த ஆண்டில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் பேருதவி புரிந்திட்ட அனைத்து முன்னணி நிர்வாகிகளுக்கும் நெல்லை NFPE தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .இந்த வெற்றி நமது இயக்கத்தின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்திட வெற்றியாகும் .
            அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்கள் 
நெல்லை --23 அம்பாசமுத்திரம் -11 மொத்தம் -34
           அஞ்சல் நான்கு புதிய உறுப்பினர்கள் 
நெல்லை --23  அம்பாசமுத்திரம் --6 மொத்தம் =29
                    ஆக சுமார் 63  ஊழியர்கள் இந்த ஆண்டில் நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் .அதுபோக பல்வேறு ஊழியர்கள் RULE 38 யின் கீழ் வந்தவர்களிலும் நமது NFPE இயக்க தோழர்களாக இருக்கின்றனர் .NFPE இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இனைந்திட்ட அனைத்து ஊழியர்களை வரவேற்கிறோம் . இந்த உறுப்பினர்கள் சேர்ப்பில் ஈடுபட்டு களப்பணியாற்றிய முன்னனி தோழர்கள் /தோழியர்களுக்கு மீண்டும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இன்குலாப் ஜிந்தாபாத் .
                                       தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பா கரண் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Tuesday, April 28, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                             ஒருவழியாக நமது CPMG அவர்க்ளின் 24.04.2020 தேதியிட்ட  உத்தரவின் படி  பல கோட்ட நிர்வாகங்கள்  தலைமைஅஞ்சலகங்களில் சமூக விலகலை கடைபிடிக்கும் பொருட்டு மினிமம் ஊழியர்களை வரவழைத்து அனைத்து பிரிவுகளையும் இயக்கிட முன்வந்துள்ளன ..
ரோஸ்டர் என்றில்லாமல் சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கத்தோடு -முழு சேவையை வழங்கிட  குறைந்தபட்ச தேவையான ஊழியர்களை கொண்டு தலைமை அஞ்சலகங்களை இயக்கிட முனைந்திருக்கும் தலைமை அஞ்சலக அதிகாரிகளின் முடிவுகள் வரவேற்கத்தக்கது .
*புதிதாக எழுத்தராக பணியில் சேர்ந்த நமது தோழர்கள் /தோழியர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராததால் தங்களுக்கு ஊதிய பிடித்தம் வருமா என தங்களது சந்தேகங்களை கேட்டுள்ளனர் .அவர்களுக்காக இந்த பதில் 
1.இந்த மாதம் யாருக்கும் ஊதிய பிடித்தம் கிடையாது .
2.மார்ச் மாதம் பணியில் சேர்ந்த GDS TO PA ஊழியர்களுக்கு 
EL 8 நாட்கள் HPL 5 நாட்கள் வழங்கப்படும் .CL யை பொறுத்தவரை CL வழங்கும் அதிகாரிகளே  முடிவு செய்வார்கள் 
3.LOCK DOWN காலத்தை எவ்வாறு முடிவெடுக்கலாம் என நமது இலாகா முதல்வரால் எந்த அறிவிப்பும் வரவில்லை .முறையான அறிவிப்பு வரும்பொழுது அதுகுறித்து முடிவெடுக்கலாம் .
*விடுப்பு தேவைப்படுகிறவர்கள் சரியான காரணத்தை கூறி விண்ணப்பங்களை அனுப்பலாம் .யாருக்கும் விடுப்பு வழங்கப்படாது என்ற நிலையில் இருந்து நிர்வாக முடிவுகள் மாறியிருக்கிறது 
*நேற்றுவரை அருகாமையில் உள்ள அலுவலகங்களில்  பணியாற்றிட ஊழியர்களின் விருப்பங்களை  பரீசீலித்த கோட்ட நிர்வாகத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, April 25, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                கடந்த 20.04.2020 முதல் ஊரடங்கு சற்று தளர்வதை முன்னிட்டு அஞ்சலகங்கள் முழுமையாக செயல்படவேண்டும் அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்லவேண்டும் ரோஸ்டர் முறை ரத்து அவரவர் சொந்த அலுவலகங்களில் தான் பணியாற்றிடவேண்டும் என்ற இறுக்கமான ஒருஉத்தரவை மாநில நிர்வாகம் பிறப்பித்ததை நாம் அறிவோம் .இந்த சூழ்நிலையில் நமது மாநிலச்சங்கம் குறிப்பாக நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களின் இடைவிடாத முயற்சியினால் CPMG அவர்களை இரண்டுமுறை  சந்தித்து விவாதித்து தொடர்ச்சியான உத்தரவினை பெற்றுத்தந்தார்கள் .சென்னையை பொறுத்தவரை கடுமையான காவல்துறை கெடுபிடி  பல பகுதிகள் மூடப்பட்ட நிலையிலும் ஊழியர்களின் நலனுக்காக தொடர்ந்து அதிகாரிகளை சந்திப்பதும் கடிதங்களை கொடுத்து விவாதிப்பதும் படிப்படியாக உத்தரவுகளை பெறுவதும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும் .மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில் நமது தமிழகத்தில் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது என்பதை நாம் உறுதிப்பட கூறமுடியும் .
நேற்றைய உத்தரவில் கூறப்பட்ட அடிப்படையில் பார்த்தால் 
1.வேலைபளுவிற்கு ஏற்ப குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு  அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் -இதன்படி ஒன்று ரோஸ்டர் பராமரிக்கபடவேண்டும் அல்லது விடுப்பு கேட்கிற ஊழியர்களுக்கு தடையில்லாமல் விடுப்பினை வழங்கிடவேண்டும் 
2.குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு அடிப்படை அஞ்சல் சேவைகள் சமூக இடைவெளி கடைப்பிடித்துஅளிக்க வேண்டும் -சமூக இடைவெளியை கடைபிடிக்க மீண்டும் மீண்டும் நிர்வாகத்தால் வலியுறுத்தப்படுகிறது என்றால் ஊழியர்களை ஒரேநேரத்தில் ஒரேஇடத்தில் மொத்தமாக பணிசெய்திட உத்தரவிடக்கூடாது என்பதுதான் 
               இதை அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்கள் தான் புரிந்துகொண்ட ஊழியர்களின் நலன் பேனவும் சமூகஇடைவெளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திடவும் வேண்டும் .
                           மாநில நிர்வாகத்துடன் பலமுறை பேசி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தும் அரசாங்கத்தைப்போல் படிப்படியாக ஊழியர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்திசெய்துவரும் மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் பணி தொடர்ந்திட  வாழ்த்துகிறோம்   
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, April 24, 2020

                    அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள எங்கள் மீது அலட்சியம் ஏன் ? எங்கள் கோரிக்கைகளின் மேல் நிர்வாகத்தின்  அசட்டை ஏன் ?ஏன் ?
கொரானா தொற்று பேராபத்தினை தொடர்ந்து நாடுமுழுவதும் நம்மை பற்றி  இருவிதமான செய்திகள் ஊடகங்களில் உலாவருகின்றன .ஒருபக்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்  பஞ்சப்படி முடக்கம் . மத்தியஅரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதாமாதம் ஓராண்டிற்கு ஒருநாள் ஊதிய பிடித்தம்.-மற்றொரு பக்கம் அஞ்சல் துறை தனது இழந்த பெருமையை நிலைநாட்டி வருகிறது .டன் கணக்கில் மருந்துக்கள் பாதுகாப்பு உபகரணங்கள் நாடுமுழுவதும் அஞ்சல் துறை ஊழியர்கள் வழங்கிவருகிறார்கள் .ஊரடங்கில் தனியார் கொரியர் செய்யமுடியாத பணியினை அஞ்சல் ஊழியர்கள் செய்துவருகிறார்கள் இந்த இரு தரப்பட்ட செய்திகளுக்கு நடுவே நமது நிலையோ ஒரு பரிதாபகர நிலையில் இருக்கின்றன .DOPT உத்தரவுகளில் உள்ளது போல் அனைத்து குரூப்  C ஊழியர்களும் 33 சதம் பணிக்கு வந்தால் போதும் என்கின்ற உத்தரவை பார்த்து நமக்கும் இதேபோல் ரோஸ்டர்  முறை பின்பற்றப்படுமா என கேட்டால் அத்தியாவசியசேவையில் அஞ்சல் துறை இதற்கு விதிவிலக்கு கிடையாது என்கின்றது நமது துறை .
             அஞ்சல் துறை பின்பற்றுவது எந்த அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் ?
1.அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற  மருத்துவர்கள் செவிலியர்  சுகாதாரப்பணியாளர்களுக்கு உள்ள காப்பீடு போல் 50 லட்சம் வழங்கும் உத்தரவு அஞ்சல் துறைக்கு பொருந்தாததா ? 
2.வங்கிகளில் ஒவ்வொரு ஆறுநாள் வேலைக்கும்  1நாள் கூடுதல் ஊதியம் இதுகுறித்தும் நமது துறை வாய் திறக்காது ?
3.33 சத ஊழியர்கள் போதும் என DOPT உத்தரவு அதை இன்று தமிழகஅரசும்  அறிவித்துள்ளது மதியம் 1 மணிக்கு மேல் மக்கள் நடமாட கெடுபிடி -முழு ஊழியர்கள் வருவதால் சமூக விலகல் கேள்விக்குறி -இதற்கவது ரோஸ்டர் முறை பயன்படுத்த என்ன தயக்கம் ?
.4.குறைந்தபட்சம் அவரவர் விடுப்பை  கூட எடுக்கமுடியாத நிலை இது எந்த அமைச்சக உத்தரவு ?
                    இந்த சுழலில் நமது  மத்திய சங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும் .குறைந்தபட்சம் ஊழியர்களின் நலன்கள் பாதுக்கப்படவேண்டும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                   
                                            

Thursday, April 23, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                  நமது மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின் படி  ஊரடங்கு தளர்த்தப்படும்  வரை ஊழியர்கள் அருகாமையில் உள்ள அஞ்சலகத்தில் பணியாற்றிட அனுமதிக்கலாம் என்ற அடிப்படையில் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் அவர்களது வேண்டுகோளினை ஏற்று பணிசெய்திட உத்தரவிட்ட நமது கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
                                    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 




Wednesday, April 22, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     ஊரடங்கு தளர்த்தப்படுகிறதோ இல்லையோ மாநில நிர்வாகத்தால் ஊழியர் நலன் சார்ந்த சில  விசயங்கள் தளர்த்தப்படவேண்டியது அவசியம் .தற்சமயம் விடுப்பு வேண்டுவோருக்கு  கீழ்கண்ட அடிப்படையில் மட்டுமே விடுப்பு வழங்கப்படுகிறது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும் .
.Hospitalization Officials with medical history/surgery Officials with medical history/surgery
Physically handicapped Pregnant ladies
 1.நேற்று கூட இரு மூத்த தோழியர்களுக்கு விடுப்பு வழங்குவதில் ஏற்பட்ட  தாமதத்தை நமது SSP  திரு VPC அவர்களிடம் எடுத்துக்கூறியவுடன் இருவருக்கும் உடனடியாக விடுப்பு  வழங்கப்பட்டது .அதே போல் மிக நீண்டநாள் கோரிக்கையான இரண்டு தபால்காரர்களின் இடமாறுதல் உத்தரவுகளும் நேற்று  வழங்கப்பட்டது .மனிதாபிமான அடிப்படையில் ஊழியர்களின் நலன் சார்ந்த முடிவுகளை எடுத்த நமது SSP திரு .VPC  அவர்களுக்கும் நமது ASP (HOS ) திரு மாரியப்பன் அவர்களுக்கும் திரு .வேதராஜன் (ASP OD ) அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
2. அருகாமையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிட  அனுமதிக்கும்  CPMG அலுவலகஉத்தரவு நேற்றுமாலை வரை  நமது மண்டல அலுவலகத்தின் மூலம் கோட்ட அலுவலகத்திற்கு வரவில்லை .இன்று உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் விருப்பம் தெரிவித்து மெயில் அனுப்பிய ஊழியர்களின் விருப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 
உத்தரவுகள் இன்று வெளிவரும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, April 21, 2020


__  ,,,,, __   ,,, ,,__
     பாவேந்தர்புரட்சிக்கவிஞர்பாரதிதசன்நினைவு நாள்
                                                                 21.4.1964
அழுபவன் கோழை
உள்ளதைப் பேசு.
ஊமைபோல் இராதே.
ஐந்திற் கலை பயில்.
தமிழ் உன் தாய்மொழி.
கல்வி கற்கண்டு.
கால் விலங்கு கல்லாமை.
கூனி நடவேல்.
சீறினாற்சீறு
சோம்பல் ஒரு நோய்.
தோற்பினும் முயற்சி செய்.
நினைத்ததை உடன் முடி
நூல் பயில் நாடொரும்.
முத்தமிழ் முக்கனி
மொழிகளில் தமிழ் முதல்
வள்ளுவர் நூல் பயில்
____ ____

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                     ஆபத்தை உணர்வது எப்போது ?
       ஒருவழியாக 20.04.2020 அன்று அனைத்து அஞ்சலகங்களையும் செயல்படவைத்ததாக மேல்மட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .சுமார் 50 முதல் 80 கிமீ தூரம் வரை ஊழியர்கள் சாலைபோக்குவரது முற்றிலும் தடைபட்ட பொழுதிலும்  அலுவலகம் சென்றுவந்ததை நிர்வாகம் கணக்கெடுத்திருக்கும் .அருகில் உள்ள அலுவலகங்களில் கூட பணியாற்றிட அனுமதி இல்லை .ஆனால் இரண்டு அலுவலகங்கள் அடுத்த அலுவலகங்களோடு இணைக்கப்பட்டது நமது கோட்டத்தில் தான் ..(மேலப்பாளையம் -மேலப்பாளையம்  .பஜார் )நேற்று காலைகூட  சென்னையில் கனவுகளை சுமந்துகொண்டுவந்த தபால்காரர் தேவபாண்டியன் மனஉளைச்சல் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் .சமூக விலகல் முற்றிலும் காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது .நேற்று நமது CPMG அவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைந்து கோட்டங்களுக்கு வரவேண்டும் .நேற்றுமட்டும்  சம்பளத்தை பிடி என அறிவித்திருந்தால் இரவோடு இரவாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் .
ஊழியர் நலன் சார்ந்தது என்றால் வழக்கத்தைவிட மெதுவாகத்தான் கோப்புகளும் நத்தை வேகத்தில் தான் நகரும் போலும் ..
                        மாநிலச்சங்கம் மூலம் வந்த நேற்றைய  கூட்டத்தின் முடிவுகள் 
1. ஏற்கனவே உத்திரவிட்டபடி, 
ஊதிய பிடித்தம் 
என்பது யாருக்கும் இருக்காது. ரோஸ்டர் முறையில் பணிக்கு வரமுடியாத ஊழியர்கள் தகுந்த காரணங்களை முறைப்படி தெரிவித்திருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்படும் . 
மேலும் பணிக்கு வராத காலத்தை எப்படி முடிவு செய்வது என்பது குறித்து தடைக்காலம் முடிந்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும். 

2. முன்பிருந்தது போல ,  
பணிக்கு வருவதற்கு
குறைந்த பட்ச ஊழியர்களைக் கொண்ட ரோஸ்டர் முறை மீண்டும் அமுல்படுத்திட இதர அதிகாரிகளுடன்
கலந்து ஓரிரு நாட்களில் முடிவுகள் தெரிவிக்கப்படும். 

3. உரிய பொதுப் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அவரவர் பணி யிடத்திற்கு  செல்லமுடியாத ஊழியர்கள் அந்தந்த கோட்டத்திற்குள்ளாக 
அவர்களுக்கு  அருகாமையிலுள்ள அஞ்சலகத்தில் பணிக்கு Report 
செய்ய அனுமதிக்கப் படுவார்கள். 

4. உடல்நிலை,  
போக்கு வரத்து வசதி இல்லாமை 
போன்ற உரிய காரணங்களுடனான முறையான விடுப்பு விண்ணப்பங்கள் 
நிராகரிக்கப்பட மாட்டாது. 

5. DOPT மற்றும் DOP உத்திரவுகளின்படி 50 வயதை கடந்தவர்கள்,  நோயுற்றோர், மாற்று திறனாளிகள், 
pregnant women உள்ளிட்டோருக்கு 
உரிய விடுப்பு வழங்கப்படும். 

6. MHA, DOPT, DOP உத்திரவுகளின்படி தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட உரிய சுகாதார வசதிகள் செய்துதர
கீழ்மட்ட அதிகாரிகளுக்கு
உரிய உத்திரவுகள் வழங்கப்படும். 

7. ஊழியர்கள் தங்கள் பணி முடிந்ததும், அலுவலக நேர முடிவு வரை காத்திருக்காமல் அவரவர் இல்லம் திரும்பலாம்.
                        ஏற்கனவே அருகிலுள்ள அலுவகத்தில் பணியாற்றியவர்கள் மீண்டும் ஒரு விருப்ப கடிதத்தை அனுப்பிவிட்டு கோட்ட சங்கத்திற்கும் தகவல்களை தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
            
              

Monday, April 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                           உலக பேரழிவு ,பேரிடர் கால நடவடிக்கைள் நாடெங்கிலும் அமல் /தமிழகத்தில் சிகப்பு மண்டல பகுதிக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை போக்குவரத்து முற்றிலும் முடக்கம் .இந்தநிலையில் தான் சமூக விலகலை குறித்து கவலையில்லை பாதுகாப்பு உபகரணங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வாகன வசதி நிர்வாகம் செய்துதராது வாகனஅனுமதி க்குநீங்களே எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள் ஆனால்  இன்று எப்படியாவது அனைத்து அலுவலகங்களும் இயங்கவேண்டும் அதுமட்டுமல்ல அவரவர் சொந்த இடத்தில்தான் தான் பணியாற்றவேண்டும்  என்ற நிர்வாகத்தின் நிலைப்பாடு கொரானாவை விட கொடுமையாக இருக்கிறது .
                           இதுகுறித்து  இன்று நமது CPMG அவர்களுடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது .நேற்று இரவு நமது கோட்ட நிர்வாகம் வெளியிட்ட  செய்தியில் மண்டல /மாநில நிர்வாக முடிவுகளுக்கு பிறகே அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என்று அனைத்து அலுவலகங்களுக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .இருந்தாலும் அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட  விரும்பும் தோழர்கள் நேற்று நாம் அனுப்பியபடி ஒரு கடிதத்தை இன்றே அனுப்பிவிட்டு கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
                          இன்று பணிக்கு செல்லமுடியாதவர்களும் தங்களது சொந்த விடுப்பை விண்ணப்பிக்கவும்.
                       நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Sunday, April 19, 2020

அன்பார்ந்த தோழர்களே !
                                  கடைசி கட்ட முயற்சியும் தோல்வி !
                            நமது கோட்டத்தில் குறைந்தபட்சமாக மிக குறைந்த அளவு ஊழியர்களையாவது அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட  அனுமதி கேட்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவந்தோம் .இறுதியாக கோட்ட நிர்வாகம்  மறுத்துவிட்டது . Temporary attachment செய்யப்பட்ட ஊழியர்கள் அவரவர் சொந்த அலுவலகங்களுக்கு தான் செல்லவேண்டும் என நமது கோட்ட நிர்வாகமும் கடைசியாக கைவிரித்துவிட்டது .ஆகவே போக்குவரத்து இல்லாத ஊழியர்கள் நாளை முதல் ஓரிரு நாட்களுக்கு சொந்தவிடுப்பை விண்ணப்பித்துக்கொள்ளவும் .நாளை நமது CPMG அவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்பு நல்ல முடிகளை எதிர்பார்ப்போம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                  உயிரா ? உத்தியோகமா ? ஊதியமா ?
              கல்வியா ?செல்வமா ? வீரமா ? என இலக்கிய மற்றும் ஆன்மிக சுவை பருகிய இந்த தேசத்தில்  இன்று அஞ்சல் ஊழியர்களின் மனக்கேள்விகள் இதுதான் 
 உயிரா ? உத்தியோகமா ? ஊதியமா ? பட்டிமன்றத்திற்கு நல்லதொரு தலைப்பு ! நாட்களை எப்படி தள்ளப்போகிறோம் என்பதே ஊழியர்களின் தவிப்பு .
                ஊரடங்கு  மே 3 ம் தேதி வரை தொடரும் என்கின்ற நிலையில் ஏப்ரல் 20 ஏப்ரல் முதல் சில பிரிவுகளுக்கு ஊரடங்கில் இருந்து தளர்த்தப்படுவதாக அறிவித்ததில் இருந்து அஞ்சல் வாரியமும் 20.04.2020 முதல் அனைத்து அஞ்சலகங்களையும் முழுமையாக செயல்படுத்த முனைத்திருக்கிறது ..
                   ஆனால் கொரானா பாதிப்புகளில் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்தகைய தளர்வினை அமுல்படுத்திட எந்தவித உத்தரவும் இல்லை .நமது மாநிலத்திலும் பல மாவட்டங்கள் ( நெல்லை மாவட்டமும் )தொடர்ந்து சிகப்பு மண்டலமாகத்தான் இருக்கிறது .
                      இந்தநிலையில் நமது CPMG அலுவலக 17.04..2020 தேதியிட்ட  உத்தரவினை காட்டி அனைத்து அலுவலகங்களையும் திறப்பது  அனைத்து ஊழியர்களையும் பணிக்குவரச்சொல்லி அழைப்பது மட்டுமல்லாமல் பணிகுவராத ஊழியர்களுக்கு சம்பளம்கிடையாது யாருக்கும் விடுமுறை கிடையாது என இடைச்செருகளோடு பல கோட்டங்களில் உத்தரவுகளை கோட்ட  அதிகாரிகள் பிறப்பித்து வருகிறார்கள் .அதிலும் ஒரிஜினல் போஸ்ட்  யில் தான் பணியாற்றவேண்டும் என துணை கட்டுப்பாடு .
                       பணிக்கு வருவதற்கு ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் .அவர்களுக்கு மத்தியஅரசின் உத்தரவு படி வாகன வசதிகள் பாதுகாப்பு அம்சங்கள் சமூக விலகலை கடைபிடிக்க உத்தரவாதம்போன்ற அத்தியாவசிய தேவைகளை  நிர்வாகம் கொடுப்பதாகவும் தெரியவில்லை அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரியவில்லை .
                         பொத்தாம் பொதுவாக ஊழியர்கள் பணிசெய்யும் இடத்தில்  இருந்து 8 கி.மீ .குள் தானே இருக்கவேண்டும் என்பதெல்லாம் இப்பொழுது பொருந்துமா ?பணிபுரியும் பகுதியில் ஊழியர்கள் இருந்தாலும் அவர்கள் குடும்பம் வேறு பகுதியில் வசித்துவருவதால் இந்த பேராபத்து காலத்தில் குடும்பத்தோடு இருக்கும் ஊழியர்கள் எப்படி அலுவலகத்திற்கு வர முடியும் என்பதே எங்கள் கேள்வி .
                        அதற்குத் தான் VEHICLE PASS கொடுக்கிறோம் என்றால் ஒரு காகிதத்தில் INDIA POST  ESSENTIAL SERVICE என ஒட்டிக்கொண்டு போகமுடியாது .எந்த வாகனத்தில் செல்கிறோம் அந்த வாகன எண் வாடகை கார் என்றால் அதன் எண் ஓட்டுநர் பெயர் அதில் அதிகபட்சமாக பயணிக்க எத்தனை பேருக்கு  அனுமதி எங்கிருந்து எங்குவரை எந்தத்தேதியில் இருந்து எந்த தேதிவரை  இவைகள் அடங்கிய தகவல்கள் அடங்கிய கோட்ட அலுவலக முத்திரை இது தான் VEHICLE PASS   இது எத்தனை கோட்டத்தில் எத்தனை  ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ?
                 பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் CPMG அவர்கள் 16.04.2020 அன்று வெளியிட்ட உத்தரவை பார்த்திருப்பீர்கள் .
அதில் தலைமை அஞ்சலகம் காலை 10 முதல் மாலை 3 மணிவரை இயங்கும் ஊழியர்கள் அருகிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றலாம் ஏன் கோட்டம் விட்டு கோட்டம் கூட பணிபுரியலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கேரளா இந்தியாவில் தானே இருக்கிறது .நமக்கும் கேரளாவிற்கு ஒரே DG தானே !
                       நமது கோட்டத்திலும் நேற்றுவரை அப்படித்தானே எல்லா அலுவலகங்களும் திறக்கப்பட்டன .எல்லா ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர் .தொலைதூரத்திற்கு போக்குவரத்து தடையினால் செல்லமுடியாத ஊழியர்கள் பக்கத்து அலுவலகங்களில் பணிபுரிந்துவந்தனர் .இதில் நிர்வாகத்திற்கு என்ன சிக்கல் ?என்ன பாதிப்பு ? அவர்களை அதே இடத்தில் பணிபுரிய அனுமதிப்பதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது ? அவரவர் சொந்த அலுவலகத்தில் தான் பணியாற்றவேண்டும் என்பது யார் போட்ட உத்தரவு ?
                       நாங்கள் கேட்கும் சிறப்பு விடுப்பை வழங்கத்தான் முடியாது என்றால் ஊழியர்களின் சொந்த விடுப்பை கூட வழங்கமுடியாது என்பது எந்த வகையில் நியாயம் ?
                  ஆகவே கோட்ட நிர்வாகத்திற்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை 
1.ஊழியர்களை ஏற்கனவே தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருக்கும் அலுவலகங்களில்  பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் 
2.பணிக்கு பிற இடங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு  STANDARD VEHICLE PASS  வழங்கிட வேண்டும் .
3.உடல்நலக்குறைவு குடும்ப பிரச்சினை இவைகளுக்கு ஏற்கனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களுக்கு விடுப்பு வழங்கிடவேண்டும் .
                  நமது உறுப்பினர்களின் கவனத்திற்கு 
.நேற்று இதுகுறித்து நமது SSP .திரு .VPC அவர்களிடம் கடிதத்தை அனுப்பி பேசியிருக்கிறோம் அவர்களும் நாளை வந்து இதுகுறித்து ஒரு சுமுகமான முடிவுகளை எடுப்போம் என தெரிவித்திருக்கிறார் .
1.பிற அலுவலகங்களில் பணியாற்றிட  கேட்டவர்கள் அதன் விவரத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .
2.கூடுமானவரை பணிக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் நாளை பணிக்கு செல்லுங்கள் .VEHICLE PASS வேண்டுபவர்களுக்கு உடனே கிடைத்திட வழிவகை செய்து தரப்படும் .
3.எந்த சூழலிலும் அலுவலகம் செல்ல முடியாத ஊழியர்கள் தங்களது சொந்த விடுப்பை விண்ணப்பிக்கவும் .(முன்னதாக சிறப்பு விடுப்பு விண்ணப்பித்தவர்களும்  தனியாக சொந்த விடுப்பை விண்ணப்பிக்கவும் .
.ஒரு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொழுதுதான் நிர்வாகம் இப்படி கடுமையாக நடந்துகொள்வது வ(ப )ழக்கம் .ஆனால் பேரழிவின் விளிம்பில் கூட  தமிழகத்தில் அதிகார   
சா(சே )ட்டைகள்  இப்படி ஊழியர்களுக்கு எதிராக  சுழல்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது .
                        இதுகுறித்து  நமது மாநில செயலர் தோழர் வீரமணி அவர்கள் நாளை அனைத்து மாநிலசெயலர்களுடன் இனைந்து (NFPE -FNPO)  நமது CPMG அவர்களை சந்தித்து பேசவிருக்கிறார்கள் 
1.யாருக்கும் ABSENT என்று ஊதிய பிடித்தம் கூடாது 
2.பணிக்கு வரவிரும்பும் ஊழியர்க்ளுக்கு வாகன வசதிகளை செய்துதர வேண்டும் 
3.மீண்டும் ரோஸ்டர் அடிப்படையில் பணிசெய்திட அனுமதிக்கவேண்டும் .பக்கத்துக்கு அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் 
.4பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக வழங்கிட வேண்டும் 
.5.விடுப்பு விண்ணப்பிக்கிற ஊழியர்களுக்கு விடுப்பினை வழங்கிட வேண்டும் 
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசவுள்ளனர் .
.நிச்சயம் நல்லதொரு செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம் .

     நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                                  

Saturday, April 18, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                      அனைத்து அஞ்சலகங்களும் இயங்கவேண்டும் .பட்டுவாடா முழுமையாக செய்திடவேண்டும் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவுகள் போடட்டும் பரவாயில்லை .
                     ஆனால் பணிக்கு வரவில்லை என்றால் ABSENT போடப்படும் சம்பளம் பிடிக்கப்படும் விடுமுறை மறுக்கப்படும் என்பதெல்லாம் யார் கொடுத்த அதிகாரம்? நேற்றைய உத்தரவில் இருந்ததெல்லாம் அதிக காரம் .
1.திருநெல்வேலி RED ALERT வளையத்திற்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
2.50 வயதிற்கு மேற்பட்டோர், உடல் நலம் குன்றியோர், pregnant women, Person with Disabilities இவர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு 
3.public transport system முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அஞ்சல் துறையில் ஊழியர்கள் பணிக்கு சென்று அலுவலகம் திறந்து,பணி முடித்து வீடு திரும்பிட எந்த ஏற்பாடு
இவைகள் எல்லாம் ஏட்டளவில் தான் உள்ளதா ?
                       இந்த நிலையில் கொரானா நோயால் ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் ரூபாய் 10 லட்சம் அறிவிப்பு வேறு .
                         அத்தியாவசிய சேவை என அறிவித்ததில் இருந்து அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்போடு பணிசெய்துவருகிறார்கள் என்பதனை நாடும் அறியும் .நாமும் அறிவோம் .
                           இங்கே ஊதிய வெட்டு மத்தியில் ஊதிய குறைப்பு போன்ற கொடுமைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என நமது தலைவர்கள் நேற்றைய DGP உடனான சந்திப்பில் தெளிவு படுத்தியுள்ளனர் .
                         கொடுக்கவேண்டிய பாதுகாப்பு கவசங்கள் கிருமி நாசினிகள் சமூக இடைவெளி இவைகளை மேம்படுத்த நிர்வாகம் முழுமையான நடவடிக்கைகளை எடுத்தாலே போதும் 
                         நமது மாநில சங்கமும் விரைவில் CPMG அவர்களை சந்தித்து இந்த அச்சுறுத்தல் உத்தரவுகளை குறித்து விவாதிகஉள்ளனர் .நேற்றைய நமது DGP அவர்களுடனான சந்திப்பில்  யாருக்கும் ஊதிய பிடித்தம் இருக்காது என்றும் போக்குவரத்து தடை  உடல்நலமின்மை  உள்ளவர்களுக்கு முறைப்படி விடுப்பு வழங்குவதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
                        அச்சமின்றி பணியாற்றுவோம் ! அடிமைகள் இங்கு யாரும் இல்லை என்று உரக்க முழங்கிடுவோம் .
    
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, April 17, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
              உயிரோடும் உரிமையோடும் விளையாடும்  வெண்ணிலவே !
          வேலைநேரம் முடியும் பொழுது நேற்றுவரை எத்தனை பரிவர்த்தனைகள் நடந்தது என கேள்விகள் கேட்கப்பட்டது .ஆனால் இன்றுமுதல்  பெண்டிங் மணியார்டர் மற்றும் தபால்கள் எத்தனை என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன .ஒவ்வொரு கோட்டத்திலும் ஏன் இத்தனை தேக்கங்கள் என விளக்கம் வேறு ! நிர்வாகம் தான் சொன்னது வீட்டுக்கு வீடு பட்டுவாடா இல்லையென்றாலும் விண்டோ டெலிவரி  செய்யவேண்டும்  என்ற அறிவிப்புகள் எங்கே போனது ?
         சில தோழர்கள் கேட்பது போல் ரோஸ்டரில் எங்கள் பெயர் இருப்பதால் தான் நாங்கள் பணிக்குவரவேண்டிய கட்டாயம்     ஏற்பட்டது என்கிறார்கள் .அவர்களுக்கு நமது விளக்கம் 
ரோஸ்டர் என்பது குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது அலுவலகத்தை இயக்க      வேண்டும் என்பதற்குத்தானே தவிர 
அலுவலகத்திற்கு வர இயலாதவர்கள் விடுப்பு விண்ணப்பித்து விட்டு வீட்டில் இருக்கலாம் .விடுப்புக்கு முன் அனுமதி தேவை என்கிறார்களே இங்கு யாருக்காவது விடுப்பு மறுக்கப்பட்டுள்ளதா ? என்பதனையும் சிந்திக்கவேண்டும் .
                        நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை    
       

Thursday, April 16, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      ஊரடங்கு மேலும் நீட்டிப்பை தொடர்ந்து நேற்று நமது கோட்டத்தில் இருந்தும் சில வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன .அதேபோல் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு உத்தரவுகள் வந்ததை பார்க்கமுடிந்தது .நேற்றைய . Ministry of home affairs orders dt 15.04.20.  உத்தரவில் கூட  சில  துறைகளை 100 சதம் பணியாற்றவும் எஞ்சியுள்ள துறைகளில் DY SECRETARY பதவிகளில் உள்ளவர்கள் 100 சதமும் ஏனைய ஊழியர்கள் 33 சதம் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவுகள் உள்ளன .நமது கோட்டத்தில் கூட சில அலுவலகங்களை தவிர (இடிந்தகரை கூடன்குளம் நாலுமுக்கு மேலப்பாளையம் மேலப்பாளையம் பஜார் ) அனைத்து அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன .அரசாங்கம் எதிர்பார்த்த 50 சாதத்தை தாண்டி ஊழியர்கள் சதம் அடிக்க தொடங்கியுள்ளனர் ..சமூக இடைவெளி இங்கே கேள்விக்குறியாகின்றது .துணை அஞ்சலகங்களிலும் ரோஸ்டர் அனுமதிக்கப்படுகிறது .சென்னையில் தபால்காரர்களுக்கும் ரோஸ்டர் பின்பற்றப்படுகிறது .
ஒரே நாடு -ஒரே உத்தரவு ஆனால் இதை கையாளுகிறவர்கள் அவரவர் எண்ணப்படி இயக்க துவங்கிவிட்டார்கள் .மனிதரில் இத்தனை நிறங்களை ? என்பது மறந்து மனிதரில் எத்தனை நிறங்கள் என பார்த்துக்கொண்டிருக்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, April 15, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                        ஊரடங்கு மேலும் 03.05.2020 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதை அறீவீர்கள் .ஊரடங்கு நீட்டிப்பிற்கு பிறகு நமது மாநில /மண்டல நிர்வாகத்திடமிருந்து புதிதாக எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை .பெரிய அலுவலகங்களில் ரோஸ்டர் முறை பின்பற்றப்படுகிறது .தொலைதூர ஊழியர்கள் பக்கத்துக்கு அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் .விடுப்பில் உள்ளவர்கள் /விடுப்பை நீட்டிக்க நினைப்பவர்கள் உரிய நேரத்தில் விடுப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கவும் .இதற்கிடையில் C மற்றும் B பிரிவு அலுவலக SPM  தோழர்கள் மற்ற கோட்டத்தில்
 (தஞ்சாவூர் )உள்ளது போல் தங்களுக்கும் ஒருநாள்விட்டு ஒருநாள் அலுவலகம் வருவதற்கு நமது கோட்டத்திலும் உத்தரவை பெற்றுத்தர வேண்டும் என கோரி வருகின்றனர் .நேற்று இதுகுறித்து நமது SSP அவர்களிடமும் நமது ASP (HOS ) அவர்களிடமும் பேசியிருக்கிறோம் .நமது SSP அவர்கள் 13 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் சிறப்பு அனுமதிபெற்று விடுப்பில் சென்றிருக்கிறார்கள் .இருந்தாலும் இன்று இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள் .தகவல்கள் கிடைத்தவுடன் தங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, April 14, 2020

       வரலாற்றை படிப்பவர்களால்தான் வரலாற்றை படைக்கமுடியும் !
நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்தின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் வருகிற .30.04.2020 அன்று பணிஓய்வு பெறுகிறார் .அதற்குமுன்னதாக 25.04.2020 அன்று நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்திற்கு புதிய கோட்ட செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே இன்றைய தோழர்கள் நெல்லை அஞ்சல் நான்கில் ஆளுமை செலுத்திய தோழர்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம் மட்டுமல்ல மென்மேலும் நமது NELLAI NFPE இயக்கத்தை வழிநடத்திடவும் இயக்கத்தில் பங்கேற்கவும் ஒரு ஆர்வத்தை உணர்வை அவர்களின் உள்ளங்களில் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை .ஆகவே தோழர் SK .பாட்சா 2012 முதல் 2020 வரை மிக சிறப்பாக தனது பொறுப்பினை செய்துமுடித்தார் .அதேபோல் அவருக்கு முன்பு பணியாற்றிய அஞ்சல் நான்கின் பொறுப்பாளர்கள் தோழர்கள் திவான் சங்கரநாராயணன் .தோழர் சண்முகவேல்  தோழர் அந்தோணி தோழர் சிவந்தி .பொற்செழியன் தோழர் நானு தோழர் G.கிருஷ்ணன் போன்ற தோழர்கள் மேலும் பழைய சங்கர்நகர் நான்குனேரி வள்ளியூர் திருநெல்வேலி நகரம் பாளையம்கோட்டை கிளை என விரிந்திருந்த தபால்காரர் சங்க செய்திகள் தங்களிடம் அல்லது தங்களுக்கு நெருங்கிய மூத்த தோழர்களிடம் இருந்தால் தகவல்களை எங்களுக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Sunday, April 12, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                  அலுவலக வருகையை குறித்து அஞ்சல் வாரியம் 12.04.2020 அன்று மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது .இது குறித்து நமது தோழர்களின் ஐயப்பாடுகளுக்கு சிறு விளக்கம் .
.12.04.2020 உத்தரவு படி அனைத்து அதிகாரிகளும் அதாவது ASP முதல் அனைத்து உயர் அதிகாரிகளும் பணிக்கு வரவேண்டும். .
2.ஏனைய குரூப் B (NON GAZETTED ) அதாவது HSG I முதல் MTS வரை உள்ள ஊழியர்கள் ரோஸ்டர் முறையில் பணிக்கு வந்தால் போதும் என்பதே அதன் சாராம்சம் .
3.மேலும் DOPT உத்தரவு படி பணிக்கு வருகின்ற ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய SANITATION ,.CLEANLINESS  ,AND SOCIAL DISTANCING இவைகளை பின்பற்றி கொரானா
 தொற்.றிலிருந்து நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் .
            ஆனால் நமது கோட்டத்தில் பணிக்கு வருகின்ற ஊழியர்களுக்கு  கொரானா அச்சத்தைவிட வேறுஒரு புது அச்சங்கள் மனரீதியாக ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து கோட்ட சங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது .
           அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவை என்பதை நம்மைப்போன்ற களத்தில் நின்று பணியாற்றும் ஊழியர்களால் தான் நிரூபிக்கமுடியும் .நிரூபித்து வருகிறோம் .
                மேலும் விடுப்பு சம்பந்தமாக அல்லது பணிக்கு வந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறை சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் எந்தநேரமும் எங்களை தொடர்புகொள்ளலாம் 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                      

Saturday, April 11, 2020

மக்கள் தொகை கணக்கெடுக்க 
மலையளவு காகிதங்கள் தேவை 
ஆனால் 
மக்கள் கணக்கெடுக்க .........?
                                               ---- வலம்புரி ஜான் ------
                                           

      அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                          வருத்தத்தோடு பதிவிடுகிறேன் !
                உலகெங்கும் மரண ஓலம் ஓயவில்லை -வல்லவனும் நல்லவனும் இதற்கு விதிவிலக்கல்ல .நமது நாட்டிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது .அதை நீட்டிப்பதா அல்லது நீக்குவதாக என்பதை குறித்து இன்று நமது பாரத பிரதமர் அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி கூட்டம்  நடத்துகிறார் .இந்த பின்னணியில் அஞ்சல் துறையும் அத்தியாச சேவைக்குள் வந்ததாக  அறிவிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து நமது மாநில CPMG அவர்களும் கடந்த 31.03.2020 அன்று தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துபேசி அஞ்சல்துறையில் சில பணிகளை அதாவது தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்வது OAP  மணியார்டர்களை கொடுப்பது சேமிப்புக்கணக்குகளில் பணமெடுப்பது போன்ற குறிப்பிட்ட பணிகளையாவது செய்திடவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார் .அதனடிப்படையில் 01.04.2020 அன்று CPMG அவர்கள் ஒரு வழிகாட்டும் உத்தரவையும்  பிறப்பித்தார்கள் .அதன்படி குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு சுழற்சிமுறையில் அஞ்சலகங்களை 
இயக்குவது பணிக்கு வந்தவர்கள் தங்களது பணிகளை முடித்துவிட்டு செல்வது 50 வயதினை கடந்தவர்கள் உடலூனமுற்றோர் நெடுநாள் மருந்துண்ணும் நோயாளிகள் இவர்களுக்கு விடுப்பு கொடுக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார் .அதேபோல் நமது கோட்ட அதிகாரியும் நம்மை அழைத்து பேசி மினிமம் ஊழியர்களை கொண்டு பணியாற்ற ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார்கள் .இந்த அழைப்பினை ஏற்று நமது ஊழியர்களும் அச்சுறுத்தும் உயிரை பணயமாக வைத்து பணிசெய்துவருகிறார்கள் .முடக்கப்பட்ட மேலப்பாளையம் பகுதியில் எங்கள் தோழர்கள் பணிசெய்யும் காட்சிகளை பாளை உபகோட்ட அதிகாரி அவர்கள் பதிவிட்டு பாராட்டினார்  .தொலைதூரம் பயணிக்கமுடியாத அனைத்து ஊழியர்களையும் அவரவர் விரும்பிய இடங்களில் பணியாற்றிட ASP (HOS ) அவர்கள் மனிதாபிமானத்தோடு அனுமதித்து வருகிறார் .மெயில் வேன்களை இயக்க ஓட்டுநர்களில் ஒருவராகமாறி  அவர்களின் வசதிக்கேற்ப ASP(OD )அவர்கள் பம்பரமாக சுழல்கிறார் .தலைமைஅஞ்சலக அதிகாரிகள் (நெல்லை ,பாளை ) விடுப்பில் கூட போகமுடியாமல்  நாளெல்லாம் பணியாற்றுகிறார்கள் .
                           ஆனால் கடந்த 09.04.2020 அன்று திருநெல்வேலி உபகோட்ட அதிகாரி அவர்கள் திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம் பணிக்குவந்த வந்த ஊழியர்கள் மாலை வரை இருக்கவேண்டும் ஏன் அவர்களை முன்னனுமதி கடிதம் இல்லாமல் அனுப்பீனீர்கள் என ஸ்டேட்மென்ட் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்கள் .கோட்ட நிர்வாகம் அவரை அனுப்பியது வேறுஒரு புகார் குறித்து விசாரிப்பதற்கு .ஆனால் ASP அவர்களோ தனது வழக்கமான பாணியில் போஸ்ட்மாஸ்டர் அவர்களை மனம் நோகும் படி வார்த்தை பிரயோகம் நடத்தியிருக்கிறார் .திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் 59 வயதை கடந்தவர் ஒரு இருதய நோயாளி அஞ்சல் வாரியம் விதித்த அனைத்து விதிவிலக்குகளும் அவருக்கு பொருந்தும் .போக்குவரத்து இல்லை சிறு கடைகள் கூட கிடையாது இந்த சூழ்நிலையில் பணிக்கு வரும் ஊழியர்களை பாராட்ட மனமில்லாமல் போனாலும் பரவாயில்லை -உங்கள் அதிகாரத்தை சட்டத்தை கோபத்தை காட்டவேண்டிய காலம் இதுவல்ல .
                      இதுகுறித்து நமது கோட்ட  கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம் .இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருநெல்வேலியில் ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வருவதா அல்லது விடுப்பில் செல்வதா என்பதை நமது கன்னியமிக்க கண்காணிப்பாளர் அவர்களின் கையில் இருக்கிறது ..
          தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, April 9, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                              முக்கிய செய்திகள் 
*RULE 38 யின் கீழ் கடந்த ஏப்ரல் 2019 யில் இடமாறுதலுக்கு விண்ணப்பித்து WAITING LIST யில் இருக்கும் ஊழியர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை 
*புதிதாக RULE 38  இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் 01.04.2020 முதல் 30.06.2020 குள் விண்ணப்பிக்கவேண்டும் 
*கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு பணியினை வீட்டிலிருந்தே செய்திட பரீசீலிக்கவேண்டும் என அஞ்சல் வாரியத்திற்கு நமது NFPE சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது .
*ஊரடங்கு முடிந்தபின்பு அஞ்சல் துறையில் எந்தெந்த பிரிவினில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என 08.04.2020 குள் அறிக்கை சமர்ப்பித்திட அனைத்து CPMG களுக்கும் அஞ்சல் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது .மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நடந்திட உறுதிப்படுத்திடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, April 8, 2020

அன்பார்ந்த தோழர்களே !
                           முடிந்தால் பரீசீலியுங்கள் .நமது ஒருநாள் ஊதியம் நமது மாநிலத்திற்கு நேரடியாக சென்றால் என்ன?


From



To

The PostMaster



Respected sir,
Sub : Willingness or otherwise for donation of one day's salary to PM CARES fund - reg.
                      ....
It has been asked to give willingness or otherwise for donation of one day's salary to PM CARES fund by the Department.
Since Tamilnadu is the most affected State due to Corona Virus pandemic and with less fund allotment, I'm willing to donate my one day's salary to TN CM Public Relief Fund to fight against Corona spread. This will be credited to the said account directly by me.
Hence I submit that I'm unwilling to donate to PM CARES Fund and I request that one day's salary from my pay may not be deducted.
                                                                   Thanking you Sir,

                                                                                                                                   Yours faithfully,


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து வருகிற 11.04.2020 அன்று நமது பிரதமர் அவர்கள் தனது முடிவினை அறிவிப்பார் என இன்று புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு தகவல்கள் தெரிவிக்கின்றன .
        ஒருவேளை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் நமது கோட்ட  சங்க உறுப்பினர்களின்  நிலைப்பாடுகளை  விளக்கிடுவது நமது கடமையாகும் .முதற்கட்டமாக இந்த இடைப்பட்ட நாட்களில் பணிக்கு வரமுடியாத ஊழியர்களிடம் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்காத நமது கோட்ட அதிகாரிகள் அனைவருக்கும் (ஒருசில உப கோட்ட அதிகாரிகளை தவிர ) எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .மேலும் தொலைதூரங்களுக்கு பயணம் செய்யமுடியாத ஊழியர்களுக்கு பக்கத்து அலுவலகங்களில் பணிபுரிய வாய்ப்பளித்த நமது ASP (HOS ) அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் முதலில் வந்தவர்கள் மட்டுமே பணிசெய்தால் போதும் என்றில்லாமல் சுழற்சி முறையில் பணிக்கு வர உடன் பட்டிருக்கும் ஊழியர்களும் முதல்கட்டமாக பணிபுரிந்திட ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதற்கு மேலும் விடுப்பு தேவைப்படுகிறவர்களுக்கும் தயங்காமல் விடுப்பை விண்ணப்பிக்கலாம் ..இந்த நெருக்கடியில் யாரையும் கட்டாயப்படுத்தி மிரட்டி பணிக்கு அழைக்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நல் ஆலோசனைகளை வழங்கிவரும் ASP(HOS ) மற்றும்  (ASP OD ) அவர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                   போக்குவரத்து தடை கொரானா அச்சுறுத்தல் உள்ள ஊழியர்கள் தயங்காமல் தங்கள் நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் .அவர்களுக்கும் நமது கோட்ட சங்கம் வேண்டிய உதவிகளை செய்திடும் என தெரிவித்துக்கொள்கிறோம் ..
நன்றி .தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  


                                                      முக்கிய செய்திகள் 
*கொரானா நிதிக்காக அஞ்சல் ஊழியர்களிடம் ஒருநாள் ஊதியத்தை அட்வான்ஸ் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்திட (விருப்பத்தின் அடிப்படையில் )அஞ்சல் வாரியம் 0704.2020 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது முன்னதாக பஞ்சப்படி நிலுவை தொகையில் பிடிக்கப்படும் என்பது மாற்றப்பட்டுள்ளது .அப்படியென்றல் பஞ்சபடி ?
*06.04.2020 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் /மத்திய அமைச்சர்களின் ஊதியத்தில் 30 சதம் ஓராண்டிற்கு குறைக்கப்பட்டு அந்த நிதி கொரானா நல நிதிக்கு சேர்க்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பட்டு நிதி இரண்டாண்டிற்கு கிடையாது என்றும் அந்த நிதியும் கொரானா நல நிதிக்கு சேர்க்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
அன்று மாலை நமது பொதுச்செயலர் தனது முகநூல் பதிவில் கீழ்கண்ட  பதிவை பதிவிட்டுள்ளார் ."GET  READY FOR WAGE CUT "
எதை மனதில் வைத்து நமது பொது செயலர் இந்தப்பதிவை  பதிவு செய்தார் என்பது விரைவில் தெரியும் .
* அஞ்சல் வாரியம் மீண்டும்  F,R 56(r), FR 56(l) and Rule 4g(1xb) பென்ஷன்  உத்தரவை குறித்து வலியுறுத்தல் உத்தரவை 07.04.2020 அன்று வெளியிட்டுள்ளது .இது மீண்டும் ஊழியர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கலாம் .ஆனால் இது பழைய உத்தரவுகளின் தொகுப்புதானே தவிர வேறொன்றும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
Get Ready for Wage cut.
Get Ready for Wage cu.

Friday, April 3, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
    வணக்கம் .இந்த ஆண்டு நமது சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இதுவரை P 3 சங்கத்திற்கு 31  பேர்களும் P 4 சங்கத்திற்கு27  பேர்களும் புதிய உறுப்பினர்களாகிறார்கள் ..புதிய தோழர்களில் P 3 நெல்லை கிளைக்கு 21 தோழர்களும் P 4 நெல்லை கிளைக்கு 20 தோழர்களும் 
மீதமுள்ள தோழர்கள் நமது அமைப்பு விதிகளின் படி அம்பை கிளை சங்கத்திற்கும் உறுப்பினர்களாகிறார்கள் .ஆகவே நமது கோட்ட சங்கம் நிர்வகித்துவரும் வாட்ஸாப்ப் குரூப் NELLAI NFPE I மற்றும் NELLAI NFPE II குருப்புகளில் சில மாற்றங்களை செய்தியவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .ஆகவே  NELLAI NFPE I குரூப்பில் உள்ள அம்பைகிளை உறுப்பினர்கள் (முக்கிய நிர்வாகிகள் தவிர ) மற்ற தோழர்கள்  NELLAI NFPE II  குருபிற்கு மாற்றப்படவுள்ளார்கள் .இரண்டு தளத்திலும் கோட்ட சங்கம் ஒரே செய்திகளை பதிவிடும் அதில் எந்த மாற்றமும் இல்லை .ஆகவே அம்பைகிளை தோழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது ஆதரவையும் கருத்துக்களையும் தொய்வில்லாமல் பதிவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, April 2, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்கள் !
                 01.04.2020 CPMG அவர்களின் உத்தரவு சொல்வதென்ன ?
Pl note clearly :-
"Other staff should be insisted on staying at home /work from Home and ready to attend the office on demand. "
".. So that only the required staff should be broght on duty on rotation basis , so that responsability should be shared by everyone."
If need be deputation to single handed offices in turn.
1.Minimum service என்பதும் identified P.O.s என்றும்தான் உள்ளது.
மேலும், H.O.s & cash offices என்றுதான் உள்ளது. எனவே NDSO தேவையில்லை என்பது மாநில நிர்வாகத்தின் கருத்து.
அதுபோலத்தான் போக்குவரத்து வசதியில்லாத Single handed அலுவலகங்களும்.
2.அதுபோல், 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என ஏற்கனவே உத்திரவு உள்ளது. 
தற்போது தேவையான ஊழியர்கள் வாராந்திர ரோஸ்டர் அடிப்படையில் basic service ஐ செய்வதற்கு மட்டும் பணிக்கு வந்தால் போதும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தபடியே work 
from home எனக் கருதப் படுவார்கள் 
3.குறைந்த பட்ச ஊழியர், skeletal staff, work from Home , அத்தியாவசியப் பணிகள் மட்டும் என்பவையெல்லாம் நமக்கு  ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள் தான் .
.எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல் பொருந்தாது. ஏனெனில், 
சில கோட்டங்கள் இன்னமும் ஓரளவு  withstand செய்கிறார்கள். பல கோட்டங்கள் 80% க்குமேல் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது . 
ஆனால் மாநிலச் சங்கங்களின் நிலை ஒன்றே தான். அது மாறவே இல்லை.  
5.எந்தக் காரணம் கொண்டும் அடிப்படை சுகாதார தேவைகளில் சமரசமே கூடாது. அதனை உறுதி செய்து கொள்க. 
6. எந்த ஊழியர்களும் மிரட்டப்படவோ பழிவாங்கப் படவோ மாட்டார்கள். அப்படி ஏதேனும் நடந்தால் தனது பார்வைக்கு கொண்டு வந்தால் உடனே அதில் தலையிட்டு சரி செய்திடப் படும். 
7..டிரான்ஸ்போர்ட் மட்டுமே பிரச்சினை என்றால் அருகில் உள்ள அலுவலகத்தில் பணிசெய்யலாம் .
                   இருந்தாலும் வந்தவர்களை வைத்துக்கொண்டே சுழற்சி அடிப்படையில் பணிநடந்தால் போதும் என்பது ஏற்புடையதுதானா ?
"responsability should be shared by everyone." என்கிற வரிகள்  நமக்கு காட்டுவது வழிகளையா ? வலிகலையா ?
                ஊழியர்களுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருகிற பட்சத்தில் தங்கள் உண்மை நிலையைக்கு ஏற்ப  பதிலளிக்கவும் ./முடிவெடுக்கவும் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
  
                     

                                  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 0மாமா 
இன்று அகவை 60 யை தொட்டு பார்க்கும் நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தமிழ் மாநில உதவி தலைவர் ஈகையும் இரக்கமும் ஒருங்கே அமைந்திட்ட மனித நேய பண்பாளர் அருமை மாமா SK .பாட்சா அவர்களுக்கு NELLAI NFPE சார்பாக இதயம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                  நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்திற்கு புது எழுச்சியை தந்தவர் =அஞ்சல் மூன்று சங்கத்தோடு ஒற்றுமையை பலப்படுத்தியவர் -அதிகாரிகளிடம் அன்பாகவும் அதேநேரம் உரிமையாகவும் பழகியவர் -தனக்கடுத்து அடுத்தகட்ட பொறுப்பாளர்களை உருவாக்கியவர் -இந்த ஆண்டு அதிகப்படியான உறுப்பினர்களை NFPE சங்கத்திற்கு பெற்றுத்தந்தவர் --தான் வசிக்கும் பகுதிகளில் எண்ணற்ற மனிதநேய பணிகளை தனது சொந்தச்செலவில் ஆற்றிவருபவர் அருமை மாமா -பாட்சா --வாழ்க மாமா -
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, April 1, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
    நமது அமைச்சர் அவர்களின் உத்தரவு ,நமது இலாகா முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் நமது CPMG அவர்களின் அழைப்பு என அஞ்சலகங்களை குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயக்கிட நமது தொழிற்சங்கமும் சம்மதித்துள்ளது .மேலும் கொரானா நோய் தொற்றில் இருந்து ஊழியர்கள் காப்பாற்றப்பட நமது பரதபிரதமர் அவர்களின் தனித்திருத்தல் அறிவிப்பு மாநிலஅரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு இவைகளை கருத்தில்கொண்டு வரவிரும்புகிற மற்றும் வர முடிகிற ஊழியர்களை வைத்து SB வித்ட்ராவல்   நம்மிடம் டெபொசிட்டில் உள்ள SPEEDPOST தபால்களை பட்டுவாடா செய்தல் போன்ற பணிகளை செய்திட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது 
இந்த அடிப்படையில் நேற்றுமாலை நமது SSP அவர்களை சந்தித்து பணிக்கு வருகின்ற ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பாதுகாப்புகள் பணிக்கு வர இயலாத ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தோம் .
அதன்படி கீழ்கண்ட முடிவுகளை  கோட்ட நிர்வாகம்  அறிவித்தது .
1.பணிக்கு வரும் ஊழியர்களுக்கு முககவசம் மற்றும் ஹண்டவாஷ் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கப்படும் .கிடைக்காத ஊழியர்கள் கோட்டநிர்வாகத்தை தொடர்புகொள்ளலாம் .ஊழியர்கள் சுழற்சிமுறையில் பணியாற்ற அழைக்கப்படுவார்கள் (விருப்பத்தின் அடிப்படையில் )
2.பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள OUTSIDER களை தினக்கூலி அடிப்படையில் பயன்படுத்தலாம் 
3.யாரையும் பணிக்கு வரச்சொல்லி நிர்பந்தம் செய்யமாட்டோம் 
..4.வெளியூர்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள் விரும்பினால் அருகிலுள்ள அலுவலகங்களில் பணிவுரிய அனுமதிக்கப்படுவார்கள் 
5.இந்தஆண்டு RT  விண்ணப்பிக்க கடைசிதேதி 20.04.2020 என நீட்டிக்கப்பட்டுள்ளது 
6.50 வயதினை கடந்தவர்கள் ஏற்கனவே தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் ,கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் இவர்களுக்கு விடுப்பு வழங்கிட  முன்னுரிமை கொடுக்கப்படும் 
    மாநில சங்கத்தில் இருந்து வந்த தகவல்களையும் உங்கள் பார்வைக்கு மீண்டும் பதிவிடுகிறோம் 
குறிப்பிட்டு  கட்டாயமாக அல்லாமல்  பணிக்கு வரும் ஊழியர்களை குறைந்த எண்ணிக்கையில்
சுழற்சி முறையில் பணிக்கு பயன்படுத்திடலாம். 
இது அந்தந்த பகுதியின் 
தேவைப்படி HO , S.O. என்றில்லாமல் ஊழியர்களின் சேவையை சுழற்சி முறையில்(  roster) பயன்படுத்திட அறிவுறுத்தப்படும்
ஊழியர்களின் பணி நேரம் என்பது முழுமையாக இருக்க கட்டாயப் படுத்தப் பட.மாட்டாது.
பணியின் தேவைக்கேற்ப ஆங்காங்கே இதனை நிர்ணயித்துக் கெள்ளலாம்.
முக்கியமாக ஊதியப் பட்டுவாடா/pension /money order payment/OAP /MGNREGA / PMKY அவசரத் தேவைக்கான Savings 
Account withdrawal ஆகியவற்றைச் செய்திட வேண்டும். 
OAP Money order  payment Window 
delivery
முறையில் செய்திடலாம். இதுபோல Customer தொலைபேசி எண்ணில் அழைத்து M.O பட்டுவாடா செய்திடலாம்.

ஊழியரின் பாதுகாப்புக்கான அனைத்து சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க நிச்சயம் உறுதி செய்யப்படும். 

அவரவர் அலுவலகங்களிலேயே தேவையானதை தடையின்றி  வாங்கிக் கொள்ள உரிய அறிவுறுத்தல் செய்யப்படும். 

எந்த ஊழியர் மீதும் 
பழி வாங்கும் விதமாக 
எந்த அதிகாரியும் நடந்துகொள்ளாமல் பார்த்துக் கொள்ளப்படும். 
எவரும் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். 

அப்படி ஏதுவும் இருப்பின் தனது கவனத்திற்கு 
கொண்டு வரலாம்.
உடன் சரி செய்யப் படும். 

 சிறப்பு விடுப்பு குறித்து 14 ந்தேதிக்குப் பிறகு இலாக்காவுடன் கலந்து முடிவு செய்யப்படும். 

இன்சூரன்ஸ் பாதுகாப்பு.என்பது 
GDS ஊழியர்களுக்கு அளித்திட பரிசீலிப்பதாக ஏற்கனவே துறை அமைச்சர் VC ல் கூறியுள்ளார். 

Cash conveyance என்பது MMS அல்லது mail van மூலம் ஒவ்வொரு ஊருக்கும் உறுதி செய்யப்படும். 

முதியவர், உடல் நலம் குன்றியோர், PWD வகையினர் குறித்த இலாக்காவின் அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்க உத்திரவு வழங்கப்படும். 

SBCO ஊழியர்களுக்கு அத்தியாவசியமான அன்றே முடிக்கவேண்டிய
பணிகள் இல்வாததால் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலித்து தேவை அடிப்படையில் முடிவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப் படும். 

நாட்டின் நெருக்கடியான காலத்தில் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட்ட அஞ்சல் துறையில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது. 

மினிட்ஸ் வந்தவுடன் விரிவான அறிக்கை வெளியிடப்படும்

தோழமையுடன், 

A. வீரமணி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று.
நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை