அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வருத்தத்தோடு பதிவிடுகிறேன் !
உலகெங்கும் மரண ஓலம் ஓயவில்லை -வல்லவனும் நல்லவனும் இதற்கு விதிவிலக்கல்ல .நமது நாட்டிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது .அதை நீட்டிப்பதா அல்லது நீக்குவதாக என்பதை குறித்து இன்று நமது பாரத பிரதமர் அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி கூட்டம் நடத்துகிறார் .இந்த பின்னணியில் அஞ்சல் துறையும் அத்தியாச சேவைக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து நமது மாநில CPMG அவர்களும் கடந்த 31.03.2020 அன்று தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துபேசி அஞ்சல்துறையில் சில பணிகளை அதாவது தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்வது OAP மணியார்டர்களை கொடுப்பது சேமிப்புக்கணக்குகளில் பணமெடுப்பது போன்ற குறிப்பிட்ட பணிகளையாவது செய்திடவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார் .அதனடிப்படையில் 01.04.2020 அன்று CPMG அவர்கள் ஒரு வழிகாட்டும் உத்தரவையும் பிறப்பித்தார்கள் .அதன்படி குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு சுழற்சிமுறையில் அஞ்சலகங்களை
இயக்குவது பணிக்கு வந்தவர்கள் தங்களது பணிகளை முடித்துவிட்டு செல்வது 50 வயதினை கடந்தவர்கள் உடலூனமுற்றோர் நெடுநாள் மருந்துண்ணும் நோயாளிகள் இவர்களுக்கு விடுப்பு கொடுக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார் .அதேபோல் நமது கோட்ட அதிகாரியும் நம்மை அழைத்து பேசி மினிமம் ஊழியர்களை கொண்டு பணியாற்ற ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார்கள் .இந்த அழைப்பினை ஏற்று நமது ஊழியர்களும் அச்சுறுத்தும் உயிரை பணயமாக வைத்து பணிசெய்துவருகிறார்கள் .முடக்கப்பட்ட மேலப்பாளையம் பகுதியில் எங்கள் தோழர்கள் பணிசெய்யும் காட்சிகளை பாளை உபகோட்ட அதிகாரி அவர்கள் பதிவிட்டு பாராட்டினார் .தொலைதூரம் பயணிக்கமுடியாத அனைத்து ஊழியர்களையும் அவரவர் விரும்பிய இடங்களில் பணியாற்றிட ASP (HOS ) அவர்கள் மனிதாபிமானத்தோடு அனுமதித்து வருகிறார் .மெயில் வேன்களை இயக்க ஓட்டுநர்களில் ஒருவராகமாறி அவர்களின் வசதிக்கேற்ப ASP(OD )அவர்கள் பம்பரமாக சுழல்கிறார் .தலைமைஅஞ்சலக அதிகாரிகள் (நெல்லை ,பாளை ) விடுப்பில் கூட போகமுடியாமல் நாளெல்லாம் பணியாற்றுகிறார்கள் .
ஆனால் கடந்த 09.04.2020 அன்று திருநெல்வேலி உபகோட்ட அதிகாரி அவர்கள் திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம் பணிக்குவந்த வந்த ஊழியர்கள் மாலை வரை இருக்கவேண்டும் ஏன் அவர்களை முன்னனுமதி கடிதம் இல்லாமல் அனுப்பீனீர்கள் என ஸ்டேட்மென்ட் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்கள் .கோட்ட நிர்வாகம் அவரை அனுப்பியது வேறுஒரு புகார் குறித்து விசாரிப்பதற்கு .ஆனால் ASP அவர்களோ தனது வழக்கமான பாணியில் போஸ்ட்மாஸ்டர் அவர்களை மனம் நோகும் படி வார்த்தை பிரயோகம் நடத்தியிருக்கிறார் .திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் 59 வயதை கடந்தவர் ஒரு இருதய நோயாளி அஞ்சல் வாரியம் விதித்த அனைத்து விதிவிலக்குகளும் அவருக்கு பொருந்தும் .போக்குவரத்து இல்லை சிறு கடைகள் கூட கிடையாது இந்த சூழ்நிலையில் பணிக்கு வரும் ஊழியர்களை பாராட்ட மனமில்லாமல் போனாலும் பரவாயில்லை -உங்கள் அதிகாரத்தை சட்டத்தை கோபத்தை காட்டவேண்டிய காலம் இதுவல்ல .
இதுகுறித்து நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம் .இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருநெல்வேலியில் ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வருவதா அல்லது விடுப்பில் செல்வதா என்பதை நமது கன்னியமிக்க கண்காணிப்பாளர் அவர்களின் கையில் இருக்கிறது ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment