...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, April 19, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                  உயிரா ? உத்தியோகமா ? ஊதியமா ?
              கல்வியா ?செல்வமா ? வீரமா ? என இலக்கிய மற்றும் ஆன்மிக சுவை பருகிய இந்த தேசத்தில்  இன்று அஞ்சல் ஊழியர்களின் மனக்கேள்விகள் இதுதான் 
 உயிரா ? உத்தியோகமா ? ஊதியமா ? பட்டிமன்றத்திற்கு நல்லதொரு தலைப்பு ! நாட்களை எப்படி தள்ளப்போகிறோம் என்பதே ஊழியர்களின் தவிப்பு .
                ஊரடங்கு  மே 3 ம் தேதி வரை தொடரும் என்கின்ற நிலையில் ஏப்ரல் 20 ஏப்ரல் முதல் சில பிரிவுகளுக்கு ஊரடங்கில் இருந்து தளர்த்தப்படுவதாக அறிவித்ததில் இருந்து அஞ்சல் வாரியமும் 20.04.2020 முதல் அனைத்து அஞ்சலகங்களையும் முழுமையாக செயல்படுத்த முனைத்திருக்கிறது ..
                   ஆனால் கொரானா பாதிப்புகளில் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்தகைய தளர்வினை அமுல்படுத்திட எந்தவித உத்தரவும் இல்லை .நமது மாநிலத்திலும் பல மாவட்டங்கள் ( நெல்லை மாவட்டமும் )தொடர்ந்து சிகப்பு மண்டலமாகத்தான் இருக்கிறது .
                      இந்தநிலையில் நமது CPMG அலுவலக 17.04..2020 தேதியிட்ட  உத்தரவினை காட்டி அனைத்து அலுவலகங்களையும் திறப்பது  அனைத்து ஊழியர்களையும் பணிக்குவரச்சொல்லி அழைப்பது மட்டுமல்லாமல் பணிகுவராத ஊழியர்களுக்கு சம்பளம்கிடையாது யாருக்கும் விடுமுறை கிடையாது என இடைச்செருகளோடு பல கோட்டங்களில் உத்தரவுகளை கோட்ட  அதிகாரிகள் பிறப்பித்து வருகிறார்கள் .அதிலும் ஒரிஜினல் போஸ்ட்  யில் தான் பணியாற்றவேண்டும் என துணை கட்டுப்பாடு .
                       பணிக்கு வருவதற்கு ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் .அவர்களுக்கு மத்தியஅரசின் உத்தரவு படி வாகன வசதிகள் பாதுகாப்பு அம்சங்கள் சமூக விலகலை கடைபிடிக்க உத்தரவாதம்போன்ற அத்தியாவசிய தேவைகளை  நிர்வாகம் கொடுப்பதாகவும் தெரியவில்லை அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரியவில்லை .
                         பொத்தாம் பொதுவாக ஊழியர்கள் பணிசெய்யும் இடத்தில்  இருந்து 8 கி.மீ .குள் தானே இருக்கவேண்டும் என்பதெல்லாம் இப்பொழுது பொருந்துமா ?பணிபுரியும் பகுதியில் ஊழியர்கள் இருந்தாலும் அவர்கள் குடும்பம் வேறு பகுதியில் வசித்துவருவதால் இந்த பேராபத்து காலத்தில் குடும்பத்தோடு இருக்கும் ஊழியர்கள் எப்படி அலுவலகத்திற்கு வர முடியும் என்பதே எங்கள் கேள்வி .
                        அதற்குத் தான் VEHICLE PASS கொடுக்கிறோம் என்றால் ஒரு காகிதத்தில் INDIA POST  ESSENTIAL SERVICE என ஒட்டிக்கொண்டு போகமுடியாது .எந்த வாகனத்தில் செல்கிறோம் அந்த வாகன எண் வாடகை கார் என்றால் அதன் எண் ஓட்டுநர் பெயர் அதில் அதிகபட்சமாக பயணிக்க எத்தனை பேருக்கு  அனுமதி எங்கிருந்து எங்குவரை எந்தத்தேதியில் இருந்து எந்த தேதிவரை  இவைகள் அடங்கிய தகவல்கள் அடங்கிய கோட்ட அலுவலக முத்திரை இது தான் VEHICLE PASS   இது எத்தனை கோட்டத்தில் எத்தனை  ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ?
                 பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் CPMG அவர்கள் 16.04.2020 அன்று வெளியிட்ட உத்தரவை பார்த்திருப்பீர்கள் .
அதில் தலைமை அஞ்சலகம் காலை 10 முதல் மாலை 3 மணிவரை இயங்கும் ஊழியர்கள் அருகிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றலாம் ஏன் கோட்டம் விட்டு கோட்டம் கூட பணிபுரியலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கேரளா இந்தியாவில் தானே இருக்கிறது .நமக்கும் கேரளாவிற்கு ஒரே DG தானே !
                       நமது கோட்டத்திலும் நேற்றுவரை அப்படித்தானே எல்லா அலுவலகங்களும் திறக்கப்பட்டன .எல்லா ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர் .தொலைதூரத்திற்கு போக்குவரத்து தடையினால் செல்லமுடியாத ஊழியர்கள் பக்கத்து அலுவலகங்களில் பணிபுரிந்துவந்தனர் .இதில் நிர்வாகத்திற்கு என்ன சிக்கல் ?என்ன பாதிப்பு ? அவர்களை அதே இடத்தில் பணிபுரிய அனுமதிப்பதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது ? அவரவர் சொந்த அலுவலகத்தில் தான் பணியாற்றவேண்டும் என்பது யார் போட்ட உத்தரவு ?
                       நாங்கள் கேட்கும் சிறப்பு விடுப்பை வழங்கத்தான் முடியாது என்றால் ஊழியர்களின் சொந்த விடுப்பை கூட வழங்கமுடியாது என்பது எந்த வகையில் நியாயம் ?
                  ஆகவே கோட்ட நிர்வாகத்திற்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை 
1.ஊழியர்களை ஏற்கனவே தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருக்கும் அலுவலகங்களில்  பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் 
2.பணிக்கு பிற இடங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு  STANDARD VEHICLE PASS  வழங்கிட வேண்டும் .
3.உடல்நலக்குறைவு குடும்ப பிரச்சினை இவைகளுக்கு ஏற்கனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களுக்கு விடுப்பு வழங்கிடவேண்டும் .
                  நமது உறுப்பினர்களின் கவனத்திற்கு 
.நேற்று இதுகுறித்து நமது SSP .திரு .VPC அவர்களிடம் கடிதத்தை அனுப்பி பேசியிருக்கிறோம் அவர்களும் நாளை வந்து இதுகுறித்து ஒரு சுமுகமான முடிவுகளை எடுப்போம் என தெரிவித்திருக்கிறார் .
1.பிற அலுவலகங்களில் பணியாற்றிட  கேட்டவர்கள் அதன் விவரத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .
2.கூடுமானவரை பணிக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் நாளை பணிக்கு செல்லுங்கள் .VEHICLE PASS வேண்டுபவர்களுக்கு உடனே கிடைத்திட வழிவகை செய்து தரப்படும் .
3.எந்த சூழலிலும் அலுவலகம் செல்ல முடியாத ஊழியர்கள் தங்களது சொந்த விடுப்பை விண்ணப்பிக்கவும் .(முன்னதாக சிறப்பு விடுப்பு விண்ணப்பித்தவர்களும்  தனியாக சொந்த விடுப்பை விண்ணப்பிக்கவும் .
.ஒரு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொழுதுதான் நிர்வாகம் இப்படி கடுமையாக நடந்துகொள்வது வ(ப )ழக்கம் .ஆனால் பேரழிவின் விளிம்பில் கூட  தமிழகத்தில் அதிகார   
சா(சே )ட்டைகள்  இப்படி ஊழியர்களுக்கு எதிராக  சுழல்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது .
                        இதுகுறித்து  நமது மாநில செயலர் தோழர் வீரமணி அவர்கள் நாளை அனைத்து மாநிலசெயலர்களுடன் இனைந்து (NFPE -FNPO)  நமது CPMG அவர்களை சந்தித்து பேசவிருக்கிறார்கள் 
1.யாருக்கும் ABSENT என்று ஊதிய பிடித்தம் கூடாது 
2.பணிக்கு வரவிரும்பும் ஊழியர்க்ளுக்கு வாகன வசதிகளை செய்துதர வேண்டும் 
3.மீண்டும் ரோஸ்டர் அடிப்படையில் பணிசெய்திட அனுமதிக்கவேண்டும் .பக்கத்துக்கு அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் 
.4பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக வழங்கிட வேண்டும் 
.5.விடுப்பு விண்ணப்பிக்கிற ஊழியர்களுக்கு விடுப்பினை வழங்கிட வேண்டும் 
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசவுள்ளனர் .
.நிச்சயம் நல்லதொரு செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம் .

     நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                                  

0 comments:

Post a Comment