...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 18, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                      அனைத்து அஞ்சலகங்களும் இயங்கவேண்டும் .பட்டுவாடா முழுமையாக செய்திடவேண்டும் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவுகள் போடட்டும் பரவாயில்லை .
                     ஆனால் பணிக்கு வரவில்லை என்றால் ABSENT போடப்படும் சம்பளம் பிடிக்கப்படும் விடுமுறை மறுக்கப்படும் என்பதெல்லாம் யார் கொடுத்த அதிகாரம்? நேற்றைய உத்தரவில் இருந்ததெல்லாம் அதிக காரம் .
1.திருநெல்வேலி RED ALERT வளையத்திற்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
2.50 வயதிற்கு மேற்பட்டோர், உடல் நலம் குன்றியோர், pregnant women, Person with Disabilities இவர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு 
3.public transport system முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அஞ்சல் துறையில் ஊழியர்கள் பணிக்கு சென்று அலுவலகம் திறந்து,பணி முடித்து வீடு திரும்பிட எந்த ஏற்பாடு
இவைகள் எல்லாம் ஏட்டளவில் தான் உள்ளதா ?
                       இந்த நிலையில் கொரானா நோயால் ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் ரூபாய் 10 லட்சம் அறிவிப்பு வேறு .
                         அத்தியாவசிய சேவை என அறிவித்ததில் இருந்து அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்போடு பணிசெய்துவருகிறார்கள் என்பதனை நாடும் அறியும் .நாமும் அறிவோம் .
                           இங்கே ஊதிய வெட்டு மத்தியில் ஊதிய குறைப்பு போன்ற கொடுமைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என நமது தலைவர்கள் நேற்றைய DGP உடனான சந்திப்பில் தெளிவு படுத்தியுள்ளனர் .
                         கொடுக்கவேண்டிய பாதுகாப்பு கவசங்கள் கிருமி நாசினிகள் சமூக இடைவெளி இவைகளை மேம்படுத்த நிர்வாகம் முழுமையான நடவடிக்கைகளை எடுத்தாலே போதும் 
                         நமது மாநில சங்கமும் விரைவில் CPMG அவர்களை சந்தித்து இந்த அச்சுறுத்தல் உத்தரவுகளை குறித்து விவாதிகஉள்ளனர் .நேற்றைய நமது DGP அவர்களுடனான சந்திப்பில்  யாருக்கும் ஊதிய பிடித்தம் இருக்காது என்றும் போக்குவரத்து தடை  உடல்நலமின்மை  உள்ளவர்களுக்கு முறைப்படி விடுப்பு வழங்குவதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
                        அச்சமின்றி பணியாற்றுவோம் ! அடிமைகள் இங்கு யாரும் இல்லை என்று உரக்க முழங்கிடுவோம் .
    
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment