...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 24, 2020

                    அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள எங்கள் மீது அலட்சியம் ஏன் ? எங்கள் கோரிக்கைகளின் மேல் நிர்வாகத்தின்  அசட்டை ஏன் ?ஏன் ?
கொரானா தொற்று பேராபத்தினை தொடர்ந்து நாடுமுழுவதும் நம்மை பற்றி  இருவிதமான செய்திகள் ஊடகங்களில் உலாவருகின்றன .ஒருபக்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்  பஞ்சப்படி முடக்கம் . மத்தியஅரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதாமாதம் ஓராண்டிற்கு ஒருநாள் ஊதிய பிடித்தம்.-மற்றொரு பக்கம் அஞ்சல் துறை தனது இழந்த பெருமையை நிலைநாட்டி வருகிறது .டன் கணக்கில் மருந்துக்கள் பாதுகாப்பு உபகரணங்கள் நாடுமுழுவதும் அஞ்சல் துறை ஊழியர்கள் வழங்கிவருகிறார்கள் .ஊரடங்கில் தனியார் கொரியர் செய்யமுடியாத பணியினை அஞ்சல் ஊழியர்கள் செய்துவருகிறார்கள் இந்த இரு தரப்பட்ட செய்திகளுக்கு நடுவே நமது நிலையோ ஒரு பரிதாபகர நிலையில் இருக்கின்றன .DOPT உத்தரவுகளில் உள்ளது போல் அனைத்து குரூப்  C ஊழியர்களும் 33 சதம் பணிக்கு வந்தால் போதும் என்கின்ற உத்தரவை பார்த்து நமக்கும் இதேபோல் ரோஸ்டர்  முறை பின்பற்றப்படுமா என கேட்டால் அத்தியாவசியசேவையில் அஞ்சல் துறை இதற்கு விதிவிலக்கு கிடையாது என்கின்றது நமது துறை .
             அஞ்சல் துறை பின்பற்றுவது எந்த அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் ?
1.அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற  மருத்துவர்கள் செவிலியர்  சுகாதாரப்பணியாளர்களுக்கு உள்ள காப்பீடு போல் 50 லட்சம் வழங்கும் உத்தரவு அஞ்சல் துறைக்கு பொருந்தாததா ? 
2.வங்கிகளில் ஒவ்வொரு ஆறுநாள் வேலைக்கும்  1நாள் கூடுதல் ஊதியம் இதுகுறித்தும் நமது துறை வாய் திறக்காது ?
3.33 சத ஊழியர்கள் போதும் என DOPT உத்தரவு அதை இன்று தமிழகஅரசும்  அறிவித்துள்ளது மதியம் 1 மணிக்கு மேல் மக்கள் நடமாட கெடுபிடி -முழு ஊழியர்கள் வருவதால் சமூக விலகல் கேள்விக்குறி -இதற்கவது ரோஸ்டர் முறை பயன்படுத்த என்ன தயக்கம் ?
.4.குறைந்தபட்சம் அவரவர் விடுப்பை  கூட எடுக்கமுடியாத நிலை இது எந்த அமைச்சக உத்தரவு ?
                    இந்த சுழலில் நமது  மத்திய சங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும் .குறைந்தபட்சம் ஊழியர்களின் நலன்கள் பாதுக்கப்படவேண்டும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                   
                                            

0 comments:

Post a Comment