தோழர் கோமதி நாயகம் APMA/CS அம்பத்தூர் அவர்களின் தன் விருப்ப ஓய்வு --21.11.2019 -நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது
கோமதிநாயகம் எனும்
கொள்கை குன்றே !
தன்விருப்ப ஓய்வு எனும்
உன் விருப்பத்தை நீயுமா தேர்தெடுத்தாய் ?
அம்பையில் இருந்தாலும்
அம்பத்தூரில் இருந்தாலும்
நெல்லையில் உனக்கென
நிரந்தர இடம் இன்னும் நிரப்படாமலே ......
இலாகா பணியிலும் -நம்
இயக்க பணியிலும் ஒருசேர
பயணித்தவன் நீ --
எங்கள் ஐயங்களுக்கு
வினாக்களுக்கும் அவ்வப்போது
பதிலளித்தவன் நீ !
வயது வேறுபாடு ஏதுமின்றி
எங்களோடு பல நாட்கள்
பயணித்தவன் நீ !
கேடர் வித்தியாசம் ஏதுமின்றி
கேட்பவர்கள் அனைவருக்கும்
பலனளித்தவன் நீ !
சாஸ்திரங்களை கற்று அறிந்திருந்த போதிலும்
கணக்கு சூத்திரங்களை பத்திரமாய்
பாதுகாத்தவன் நீ !
இறுக்கமாக இருப்பதுபோல் தெரியும்
நெருக்கமாக நம் அணியில் இருந்ததை
பக்குவமாய் பார்த்துக்கொண்டவன் நீ !
ஆதாரம் இருந்தால் மட்டுமே
அதிகாரிகளோடு வாதாடுவாய் !அதிலும்
சேதாரம் இல்லாமல் நடந்து கொண்டவன் நீ !
உன் பணிநிறைவு நாட்கள் சிறக்க
வாழ்த்தி மகிழ்கின்றோம் ..
என்றும் அன்புடன் ----SK .ஜேக்கப் ராஜ் -----
கோமதிநாயகம் எனும்
கொள்கை குன்றே !
தன்விருப்ப ஓய்வு எனும்
உன் விருப்பத்தை நீயுமா தேர்தெடுத்தாய் ?
அம்பையில் இருந்தாலும்
அம்பத்தூரில் இருந்தாலும்
நெல்லையில் உனக்கென
நிரந்தர இடம் இன்னும் நிரப்படாமலே ......
இலாகா பணியிலும் -நம்
இயக்க பணியிலும் ஒருசேர
பயணித்தவன் நீ --
எங்கள் ஐயங்களுக்கு
வினாக்களுக்கும் அவ்வப்போது
பதிலளித்தவன் நீ !
வயது வேறுபாடு ஏதுமின்றி
எங்களோடு பல நாட்கள்
பயணித்தவன் நீ !
கேடர் வித்தியாசம் ஏதுமின்றி
கேட்பவர்கள் அனைவருக்கும்
பலனளித்தவன் நீ !
சாஸ்திரங்களை கற்று அறிந்திருந்த போதிலும்
கணக்கு சூத்திரங்களை பத்திரமாய்
பாதுகாத்தவன் நீ !
இறுக்கமாக இருப்பதுபோல் தெரியும்
நெருக்கமாக நம் அணியில் இருந்ததை
பக்குவமாய் பார்த்துக்கொண்டவன் நீ !
ஆதாரம் இருந்தால் மட்டுமே
அதிகாரிகளோடு வாதாடுவாய் !அதிலும்
சேதாரம் இல்லாமல் நடந்து கொண்டவன் நீ !
உன் பணிநிறைவு நாட்கள் சிறக்க
வாழ்த்தி மகிழ்கின்றோம் ..
என்றும் அன்புடன் ----SK .ஜேக்கப் ராஜ் -----
0 comments:
Post a Comment