...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 29, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
 வணக்கம் .நேற்று நடைபெற்ற நமது SSP அவர்களுடன் நடைபெற்ற மாதாந்திர பேட்டி குறித்து தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன் .வழக்கம்போலவே இந்த பேட்டியும் சுமார் 1 மணி 45 நிமிடங்கள்( மதியம் 12 முதல் 13.45 )வரை நடைபெற்றது .முன்னதாக நமது மாதாந்திர பேட்டியில் கொடுக்கப்பட்ட பிரச்சினைக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நமது SSP அவர்களே தொலைபேசியில் ஓரிரு தினங்களுக்கு முன் இந்த பிரச்சினையை குறித்து பேசி தீர்த்துவைப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தையும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் கிடைத்த அடுத்தநாளே கோட்ட அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி SSP அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம் ..   
       பேட்டியில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்
1.காசாளர் பதவிகள் உள்ள அனைத்து SO களிலும் காசாளர் பதவிகள் விரைந்து நிரப்பிட விண்ணப்பங்கள் கோரப்படும் .
2.RULE 38 யின் கீழ் நமது  கோட்டத்திற்கு வரவேண்டிய ஊழியர்கள் குறித்து அந்தந்த கோட்டங்களுக்குதொடர்புகொள்ளப்பட்டதாகவும் நாகப்பட்டினம் தவிர மற்ற கோட்டங்களில் இருந்து ஊழியர்கள் RELIEF செய்யப்படுகிறார்கள் .முதற்கட்டமாக கோவில்பட்டி கோட்டத்தில் இருந்து தோழர்கள் வருகிற 30.11.2019 அன்று RELIEF செய்யப்படுகிறார்கள் .அதற்கான உத்தரவு கோவில்பட்டியில் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது 
3.தோழர் துளசிராமன் வருகிற 01.12.2019 அன்று களக்காடு அலுவலகத்தில் இருந்து RELIVE செய்யப்படுவார்கள் (கோவில்பட்டியில் இருந்து தோழியர் இசக்கியம்மாள்
 (SPM மாவடி )30.11.2019 அன்று RELIEF செய்திடும் உத்தரவும் உறுதிசெய்யப்பட்டது
.4.LSG பதவியுயர்வை அமுல்படுத்தும் முன் காலியாகவுள்ள அனைத்து இடங்கள் குறித்த அறிவிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்படும் .(எல்லா LSG PA பதவிகள் உள்பட )
5.மகேந்திரகிரி நெட்ஒர்க் குறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்
6.PTC க்கு பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு இலாகாவின் சமீபத்திய உத்தரவுப்படி முழு  பயணப்படி  வழங்குவது குறித்து ஊழியர்களுக்கு விளக்க சுற்றறிக்கை வெளியி டப்படும் .இதனடிப்படையில் தோழர் ஆசைத்தம்பி அவர்களின் பயணப்படி மறுபரீசீலிக்கப்படும் .
7.TBOP பதவியுயர்விற்கு   பயிற்சி நாட்களை சேவைக்காலத்தோடு சேர்ப்பதில் விடுபட்ட தோழர்கள் அனைவரின் பெயரும் அடுத்தகமிட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்
8.பாளையம்கோட்டைக்கு 85 KV ஜெனெரேட்டர் வழங்க மண்டல அலுவலகத்தில் இருந்து மாநில அலுவகத்திற்கு நிதி ஒதுக்கீடு கேட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
9.பாளையம்கோட்டையில் தோழியர்களுக்கு தனியாக REST ROOM தற்காலிகமாக  காலியாகவுள்ள போஸ்ட்மாஸ்டர் குடியிருப்பில் பயன்படுத்திக்கொள்ள நேற்றே அனுமதிக்கப்பட்டது .
10. ஜம்மு-காஸ்மீரு க்கு  .LTC யில் சென்ற ஊழியர்களுக்கு பிடித்தம்செய்யப்பட்ட தொகை DOPT யின் சமீபத்திய உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் வழங்கப்படும் .
11..தோழர் நாராயணன் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய சிறப்பு விடுப்பு (பணியின் போது ஏற்பட்ட விபத்து )குறித்து புதிய விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பிடவும் அதன்பேரில் முடிவெடுக்கவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
12.நமது கோட்டத்தில் சிலநேரத்தில் சில உபகோட்ட அதிகாரிகளின் பேச்சுகள் ஊழியர்களுக்கு  மனஉளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைள் குறித்து விவாதிக்கப்பட்டது .சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தக்க அறிவுறுத்தல் கோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது ..இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்பதை நாமும் நம்புகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment