...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 6, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                                    முக்கிய செய்திகள் 
அஞ்சல் வாரியம் சமீபத்தில் வெளியிடப்பட்ட இலாகா ஆணையின்படி 5 வருடத்திற்கு மேல் காலாவதியான PLI / RPLI பாலிசிகளை, இறுதி வாய்ப்பாக 31.12.19க்குள் புதுப்பித்து கொள்ளலாம். அதற்கு மேல் புதுப்பிக்க இயலாது. எனவே உங்களது B.O/ S.O வில் இது போன்ற பாலிசிகள் இருந்தால் பாலிசிதாரரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாலிசியை புதுப்பிக்கச் சொல்லவும். 
  *PLI  CASH பாலிசி களுக்கு IMMEDIATE SUPERIOR கையெழுத்து தேவையில்லை என்ற புதிய உத்தரவு வந்துள்ளது 
* திருநெல்வேலி PSD இப்பொழுது நமது எஸ்டாபிளிஷ்மென்ட் க்கு உட்பட்ட PSD என ஆன பிறகு இரண்டு OA பதவிகளுக்கான விண்ணப்பங்கள் நமது கோட்ட ஊழியர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன .விருப்பமுள்ள தோழர்கள் விண்ணப்பிக்கலாம் .
*நமது கோட்டத்தில் 36 தோழர்களுக்கு LSG பதவி உயர்வு வந்த நிலையில் LSG யில் காலியிடங்கள் சுமார் 23 வரைதான் உள்ளதாக தெரிகிறது 
**GDS ஊழியர்களின் விஜிலென்ஸ் (லஞ்ச புகார்) மற்றும் நிர்வாக காரணங்களுக்கான இடமாறுதல்:-
கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் GDS ஊழியர்களின் விஜிலென்ஸ் (லஞ்ச புகார்) மற்றும் நிர்வாக காரணங்களுக்கான இடமாறுதல் குறித்த உத்தரவை அஞ்சல் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் 21.10.2019 முதல் அமலுக்கு வருகின்றன.
விஜிலென்ஸ் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக செய்யப்படும் இட மாறுதல்கள் அரிதாகவே செய்யப்படவேண்டும்.
GDS ஊழியர்களின் மேல் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தால் அதற்கு தக்க சரியான ஆதாரங்கள் இருப்பின் அவர்களை விஜிலென்ஸ் பணிஇடமாறுதல் கீழ் வேறு இடத்திற்கு பணிஇடமாறுதல் செய்யலாம்.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment