...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 16, 2019

                                                           முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                 *திருச்சி மண்டலத்தில்  LSG ஊழியர்களுக்கு கோட்ட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் 33 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்ற நிலையில் LSG காலியிடங்கள் 22 தான் உள்ளது என்பது குறிப்பிப்பிடத்தக்கது 
                                 * திருநெல்வேலி PSD க்கு இரண்டு OA பதவிகளுக்கு விருப்பமனுக்கள் பெற்றுள்ள நிலையில் அதை நிரப்பும் அதிகாரம் மண்டல அலுவலகத்திற்கு தான் உள்ளதாம் .ஆகவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் மண்டலஅலுவலக்திற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும் .
                                  *புதுவணிகத்திற்கு target நிர்ணயம் செய்து GDS ஊழியர்களை மிரட்டல் போக்கை நிறுத்திட வேண்டியும், திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, மயிலாடுதுறை, விருத்தாசலம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய கோட்டங்களை எடுத்துக்காட்டாக காட்டி GDS சங்கம் சார்பாக இலாகா விற்கு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது 
                           *திருப்பத்தூர் கோட்டத்தில் Review Meeting    என்று கூறி GDS  
ஊழியர் களை வரவழைத்து கேவலமாக பேசிய கோட்ட
கண்காணிப்பாளர் மற்றும் கோவை மண்டல  அதிகாரி ஜெயராஜ்பாபு 
அவர்களின் அத்து மீறிய பேச்சை கண்டித்தும்,
GDS  களைமிகவும் கேவலமான வார்த்தைகளால்திட்டியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நெல்லையிலும் ஒரு உபகோட்டத்தில்  இந்த பிரச்சுனை விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் .அத்துமீறி பேசுவது வேலைபார்க்க முடியாவிட்டால் வீட்டுக்குப்போ என்பதெல்லாம் தொடர்ந்தால் நாமும் போராட்ட பாதையில் செல்ல வேண்டிய சூழல் வரும் .
                           *இன்று ஆய்வாளர்கள் தேர்வு எழுதும் எமது சொந்தங்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
                            *RULE 38 மூலம் தனது சொந்தஊருக்கு (திருச்சி )செல்லும் தோழர் பரஞ்ஜோதி போஸ்ட்மேன் பாளையம்கோட்டை அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
                          நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment