...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 16, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
           அஞ்சல் மூன்றின் 39 வது தமிழ்மாநில மாநாடு -பெப்ரவரி 9 -11 
இடம் --கோவை 
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் 39வது மாநில மாநாடு எதிர்வரும் 2020 பிப்ரவரித் திங்கள் 9, 10, 11 தேதிகளில் கோவை பேரூர் மெயின் ரோடு தெலுங்குப் பாளையம் பிரிவில் அமைந்துள்ள துர்கா மகாலில் நடத்தப்பட தீர்மானிக்கப் பட்டுள்ளது. 
இதற்கான வரவேற்புக் குழு கோவை கோட்ட அனைத்து 
NFPE உறுப்புச் சங்கங்களையும் மற்றும் AIPRPA ஓய்வூதியர் சங்கத்தினையும்  இணைத்தும், உடன்  மண்டல அளவிலான அஞ்சல் மூன்று   கோட்ட/கிளைச் செயலர்களை உள்ளடக்கியும் அமைத்திட தீர்மானித்து, 
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலரும் அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிச் செயலருமான தோழர். A.வீரமணி அவர்கள் முன்னிலையேற்று நடத்தி வைத்தார். 
மேலும் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்தியத் தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தோழர். J.இராமமூர்த்தி, நமது அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர் தோழர்.N.  சுப்பிரமணியன், சம்மேளன முன்னாள் செயல் தலைவர் தோழர்.C.சந்திரசேகர், அஞ்சல் மூன்றின் முனனாள் மேற்கு மண்டலச் செயலர் தோழர். கண்ணன், கோவை அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலரும், முன்னாள் மாநில உதவித் தலைவருமான தோழர். D.எபினேசர் காந்தி,  AIPRPA சங்கத்தின் உள்ளிட்ட பல நிர்வாகிகள், முன்னணித் தோழர்கள் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்திடும் வண்ணம் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்கள். 
இறுதியாக மாநாட்டினை சிறப்பாக நடத்திட அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய வரவேற்புக் குழுவானது அமைக்கப்பட்டு மாநிலச் செயலரால் அறிவிக்கப் பட்டது. இதன்படி
மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் :
மாண்புமிகு
S.P. வேலுமணி, M.A., B.L., அவர்கள்
(தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் )
பொது ஒருங்கிணைப்பாளர்: 
தோழர்.D. எபினேசர் காந்தி அவர்கள்
பொதுச் செயலர்:
தோழர். N. சிவசண்முகம் அவர்கள்
நிதிச் செயலர். தோழியர். G.கீதப்பிரியா
அவர்கள்
உள்ளிட்ட இதர நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டனர்.
இது தவிர மேடை சேவை, போக்குவரத்து, உணவு , தங்குமிடம், மகளிர் சேவை, விளம்பரம்-ஊடகத் தொடர்பு, 
மேடை அலங்காரம், அவசர உதவி, 
மருத்துவ உதவி, தொழில்நுட்பக்குழு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள அனைத்து பகுதி தோழர்களையும் உள்ளடக்கி கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 
 இதன் முழு விபரங்கள் மற்றும் இதர விபரங்கள் வரவேற்புக்குழுவால் தனது முதல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும்.
       நமது கோட்டத்தில் இருந்து  மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் இந்த மாத இறுதிக்குள் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
            மகிளா கமிட்டி சார்பாக மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழியர்களுக்கு விசேஷ ஏற்பாடுகள் 
செய்யப்பட்டுள்ளது .தோழியர்களுக்காக நடைபெறும் சிறப்பு அமர்வில் (ஒருநாள் ) நமது முன்னணி தோழியர்களும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
  கோவைக்கும் -நெல்லைக்கும் உள்ள உறவு இன்று நேற்றல்ல அண்ணன் VS அவர்கள் காலத்திலே உருவாக்கப்பட்டது .இன்றுவரை இந்த உறவுகள் அண்ணன் காந்தி உள்ளிட்ட தோழர்களின் வழிகாட்டுதலில் தொடர்கிறது .இது நமது மாநாடு என்கின்ற உணர்வில் முழு ஒத்துழைப்பை வழங்கிடுவோம் .
மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment