...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 20, 2019

                                                முக்கிய செய்திகள் 
அஞ்சலகங்களில் கவுன்டர் வேலைநேரத்தை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து CPMG களுக்கும் அஞ்சல் வாரியம் அவர்களது கருத்தினை கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது .ஏற்கனவே நாம் வாரம் ஐந்து நாட்கள் என போராடி கொண்டிருக்கும் வேலையில் தினமும் 1 மணிநேர வேலைகளை கூடுதலாக பார்க்கும் திட்டத்தை நாம் அனுமதிக்கக்கூடாது .
1.ஏற்கனவே IT MODERNIZATION என்ற பெயரில் பழுதான  கணினிகள் மோசமான நெட்ஒர்க் கடுமையான ஆட்பற்றாக்குறை என 2012 முதல் நமது ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் ஏராளம் .இதுவரை இந்தப்பிரச்சினைகளில் இலாகா எந்த தீர்வையையும் காணாததால் ஊழியர்கள் சராசரியாக 10 மணிநேரம் வேலைசெய்துவருகிறார்கள் .இந்த சூழ்நிலையில் இந்த வேலை நேரநீட்டிப்பு நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்று .
2.தற்போதைய திட்டப்படி SB பிரிவில் 6 மணிநேரம் MPCM பிரிவில் 7 மணிநேரம் என்றால் அதன்பிறகு பல்வேறு ரிப்போர்ட் எடுத்து கணக்குகளை முடிக்க ஏறக்குறைய SB மற்றும் MPCM பிரிவிற்கும் எந்த வேறுபாடு இல்லாமல் போகும் .இது நமது அடிப்படை சட்டங்களை தகர்ப்பது போலாகும் .
3.உணவு இடைவேளைக்கு 30 நிமிடம் அதுவும் பணி பாதிக்காமல் தொடர்ந்து கவுன்ட்டர் செயல்படவேண்டும் என்றால் தனியாளாக நிர்வகிக்கும் அலுவலகங்களின் நிலை என்ன ?
4.முதலில் நமது கோரிக்கையான OPERATIVE அலுவலகங்களுக்கு 5 நாள் வேலைநேரமாக மாற்றிய பிறகு இந்த வேலைநேர நீடிப்பை பரிசீலிக்கலாம் .
            இது ஒடிசா மாநில செயலர் தோழர்  சமால் அவர்கள் நமது மத்திய சங்கத்திற்கு எழுதிய கடிதத்தின் சாராம்சம் .
ஒரு கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது .
                                          ஒருவன் பட்டுத்துணிக்கு 
                                           கனவு கொண்டிருக்க --அவனது 
                                           இடுப்பு துணியும் 
                                          களவாடபட்டது 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment