...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 22, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
  நவம்பர் 24 நமது சம்மேளன நாள் குறித்த சுற்றறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள் .அதே நவம்பர் 24 நெல்லையில் மற்றுமொரு சிறப்பு வாய்ந்த நாள் .ஆம் 1993 நவம்பர் 24 ம் தேதி தான் நமது இயக்கத்தின் மற்றுமொரு தலைவர் நண்பர் வண்ணமுத்து அவர்களின் திருமனம் நடைபெற்றது .நான் 1991 யில் பாளையம்கோட்டையில் கிளை செயலராக தலைவர் வெங்கட்ராமன் மற்றும் தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களின் தயவில் பொறுப்பேற்றேன் .1992 யில் நெல்லையை உலுக்கிய மாபெரும் தல மட்ட போராட்ட வெற்றியின் விளைவாக அன்றைய நமது தமிழ்மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் கடைக்கண் பார்வையில் நெல்லையில் எண்ணற்ற இளைய தோழர்கள் அணி திரண்டோம் .அதில் முக்கியமான தளபதிகளில் ஒருவர் தான் நண்பர் வண்ணமுத்து .தோழர் வண்ணமுத்து திருமணம் நமது சம்மேளன தினமான 24.11.2003 யில் திருச்செந்தூரில் நடைபெற்றது .அண்ணன் பாலு  அவர்கள் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்  அன்றுமாலை திருச்செந்தூரில் நடைபெற்ற சம்மேளன தின  கூட்டத்தில் அண்ணன் பாலுவோடு நெல்லை தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தோம் இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவுற்றாலும் இன்றளவும் தோழமையும் தொடர்பும்  பசுமையாகவே இருக்கின்றன .இதோ சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 





0 comments:

Post a Comment